India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடமலை – மயிலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இலவம் பஞ்சு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு தற்போது அறுவடை காலமாக உள்ளதால், இலவம் பஞ்சு விளைவிக்கும் விவசாயிகள், தங்களது விளைபொருளை அறுவடை செய்து விற்பனை செய்யும் சமயங்களில் உரிய விலை கிடைக்காத பட்சத்தில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக துறையைச் சார்ந்த உள்ளிட்ட அலுவலகங்களில் இருப்பு வைக்கலாம் என்றார்.
தேனி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் மூலம், தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் 15.04.2025 அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் என 16 நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு 369-க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப உள்ளதாக மாவட்ட ஆட்சி தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தார்.
நாளை (ஏப்.10) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தேனி, தென்காசி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Share It.
தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 25க்கும் மேற்பட்ட பராமரிப்பு தொழில்நுட்ப வல்லுநர், இயந்திர ஆபரேட்டர் காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு 12 ஆம் வகுப்பு , பொறியியல் படித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25,000 வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <
தேனி உழவர் சந்தையில் (ஏப்ரல் 09) கத்தரி ரூ.24/20, தக்காளி ரூ.18-15, வெண்டை ரூ.34/30, கொத்தவரை ரூ.20, சுரை ரூ.08-06, புடலை ரூ.28, பாகல் ரூ.35, பீர்க்கை ரூ.35/25, பூசணி ரூ.14-08, மிளகாய் ரூ.30-25, அவரை ரூ.60/50, உருளை ரூ.30, கருணை ரூ.78, சேனை ரூ.55, உள்ளி ரூ.40-35, பல்லாரி ரூ.28, பீட்ரூட் ரூ.20, நூல்கோல் ரூ.22/20, பீன்ஸ் ரூ.65, கோஸ் ரூ.15, கேரட் ரூ.26/20, சவ்சவ் ரூ.24 க்கு விற்கப்படுகிறது.
தேனி ஊழல் தடுப்புப் பிரிவு போலீசாரால் கடந்த 2015.ம் ஆண்டு தேனி மாவட்ட வேளாண்மைத் துறையில் உதவிப் பொறியாளராக பணியாற்றிய ராதாகிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை தேனி தலைமைக் குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று (ஏப்.8) ராதாகிருஷ்ணனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதித் துறை நடுவா் சரவணக்குமாா் தீா்ப்பளித்தாா்.
தேனி மாவட்டத்தில் இன்று 08.04.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டம் வீரபாண்டி பகுதியில் உள்ளது கண்ணீசுவரமுடையார் கோவில். இந்த கோவிலில் உடனிருக்கும் அம்மனாக அறம்வளர்த்த நாயகி இருக்கிறார். பங்குனி உத்திரம், சிவராத்திரி பிறப்பு நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறும். பாண்டிய மன்னனுக்குக் கண் பார்வை தந்த இந்தக் கோயிலில் வணங்கிச் செல்பவர்களுக்கு அனைத்து நோய்களும் நீங்கி விடும் என்பதும், திருமணத்தடை நீங்கும் என்பதும் இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது
தேனி மாவட்ட ஆட்சியரக உதவி எண்-04546 –254956,254946,255410, ஆட்சியரக கட்டுப்பாட்டு அறை -1077, மாநில கட்டுப்பாட்டு அறை-1070, போலீஸ் கட்டுப்பாட்டு அறை-100, விபத்து உதவி-108, தீயணைப்பு உதவி-101, ஆம்புலன்ஸ் உதவி-102, குழந்தை பாதுகாப்பு-1098, பாலின துன்புறுத்தல்-1091 *மிக முக்கிய எண்களான இவற்றை நண்பர்களுக்கு பகிரவும்
தேனி மாவட்ட அணைகளின் இன்றைய(ஏப். 08) நீர்மட்டம்: வைகை அணை: 56.89 (71) அடி, வரத்து: 516 க.அடி, திறப்பு: 72 க.அடி, பெரியாறு அணை: 113.90 (142) அடி, வரத்து: 493 க.அடி, திறப்பு: 105 க.அடி, மஞ்சளார் அணை: 33.60 (57) அடி, வரத்து: 71 க.அடி, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 91.02 (126.28) அடி, வரத்து: 26.26 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 35.80 (52.55) அடி, வரத்து: 12 க.அடி, திறப்பு: இல்லை.
Sorry, no posts matched your criteria.