India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலை கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பதவிக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது. தகுதிவுள்ள விண்ணப்பதாரர்கள் WWW.drbtheni.net என்ற இணையதளம் மூலம் வரும் நவம்பர் 7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருப்போருக்கு அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவிதொகை பெறுவதற்கு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள அலுவலர்களிடம் தொடர்பு கொள்ளலாம் என தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மொத்த கொள்ளளவு 57 அடி ஆகும். தற்போது அணையின் நீர்மட்டம் 55.3 அடியாக உள்ளது. ஆகவே கரையோர பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குளிக்கவோ,துவைக்கவோ கூடாது என பொதுப்பணித்துறை பொறியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு அலுவலகங்களில் பணியாற்றி வந்த 12 ரெவின்யூ இன்ஸ்பெக்டர்களை (ஆர்.ஐ) பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சிந்து உத்தரவிட்டுள்ளார் என இது குறித்து மாவட்ட நிர்வாகம் தனது செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் அரப்படித் தேவன்பட்டி என்.ஆர்.டி செவிலியர் மற்றும் பாரா மெடிக்கல் கல்லூரியில் நாளை(அக்.10) கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கல்விக் கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. எனவே மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் கல்விகடன் விண்ணப்பத்தை பதிவு செய்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா நேற்று(அக்.08) தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று (அக்.08) மாவட்டத்தில் பனை விதைகள் நடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தலைமையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் துணை இயக்குநர் ஆனந்த், மாவட்ட வன அலுவலர் சமர்த்தா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தேனி மாவட்டத்தில் ஒரு இலட்சம் பனை விதைகளை சேகரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே தென்பழனி வனத்துறை சோதனைச் சாவடியில் மேகமலை கோட்ட துணை இயக்குனர் முன்னிலையில் வன உயிரின வாரத்தை கொண்டாடும் விதமாக நாளை அக்.09ஆம் தேதி 4 கி.மீ தூரம் நடைபயணம் நடைபெற உள்ளது. இந்த நடை பயணத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் இளைஞர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என தேனி மாவட்ட வனத்துறையின் சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை(அக்.9) புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மதுரையில் அமைந்துள்ள அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் தேனி மாவட்டத்தில் உள்ள வேலை தேடும் மாற்றுத்திறனாளிகள் உரிய ஆவணங்கள் உடன் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தேனி அருகே உள்ள வீரபாண்டி கண்ணீஸ்வர முடையார் திருக்கோவிலில் இலவச திருமணங்களுக்கு விண்ணப்பிக்கலாம். திருமணத்திற்கு முறையான சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் ஒப்படைத்து கோவில் அலுவலரிடம் அனுமதி பெற்று இலவசமாக திருமணம் செய்யலாம். மேலும் விபரங்களுக்கு கோவில் செயல் அலுவலர் மாரிமுத்து (போன் 04546 246242) தொடர்பு கொள்ளலாம்.
கொடைக்கானலில் இருந்து பெருமாள் மலை வழியாக அடுக்கம் கிராமத்தை தாண்டி தேனி பெரியகுளத்திற்கு செல்லும் சாலையில் பலத்த மழையின் காரணமாக சாலை முழுவதும் பாறைகளாக உருண்டு சாலையை யாரும் பயன்படுத்த முடியாத அளவிற்கு மண்ணரிப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே, பெரியகுளத்திலிருந்து அடுக்கம் சாலை வழியாக யாரும் கொடைக்கானலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.