Theni

News March 11, 2025

ஆபாசப் பாடலுக்கு எதிராக தேனி மாவட்டத்தில் புகார்

image

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தற்போது ஆபாசங்கள் உச்ச கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில் “தூத்துக்குடி கொத்தனார்” என்ற முழு ஆபாசப்பாடல் இணையதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதனால் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும் சில பெண்கள் ஆபாச வீடியோக்கள் பதிவேற்றுவது தொடர்கிறது. இந்த பாடலை நீக்க வேண்டும் என தேனி மாவட்ட காவல்துறைக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.

News March 11, 2025

24.69 லட்சம் பண மோசடி பிகாா் இளைஞா் கைது

image

தேவாரத்தை சேர்ந்த சிவநேசன். தனது மனைவி வங்கிக் கணக்கிலிருந்து பல்வேறு தவணைகளில் ரூ.24.69 லட்சம் எடுக்கப்பட்டு மர்ம நபர்கள் மோசடி செய்ததாக தேனி குற்றத் தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகாா் அளித்தாா். விசாரணையில் சிவநேசன் மனைவி வங்கி கணக்கு செயலியை முறைகேடாகப் பயன்படுத்தி பீகாரை சேர்ந்த அா்ஜூன்குமாா் பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து நேற்று (மார்.10) தேனி அழைத்து வந்தனர்.

News March 11, 2025

உருவபொம்மை எரித்த போது வேட்டியில் பற்றியது தீ

image

லோக்சபாவில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தி.மு.க., – எம்.பி.,க்கள் நாகரிகமற்றவர்கள் என பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போடி, தேவர் சிலை அருகே மத்திய அமைச்சரின் உருவபொம்மை எரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.அதில் , வார்டு தி.மு.க., செயலர் சந்திரசேகரின் வேட்டியில் தீப்பற்றியது. அவர் வேட்டியை அவிழ்த்து போட்டு விட்டு ஓட்டம் பிடித்தார்.

News March 10, 2025

தேனியில் நடக்கும் மோசடி – போலீஸார் எச்சரிக்கை 

image

தேனி மாவட்டத்தில்  டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் மோசடி அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே நவீன திருடர்களிடமிருந்து பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது மிகவும் கவனமுடன் பயன்படுத்த வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து புகார் இருந்தால் சைபர் கிரைம் போலீசுக்கு 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உடனடியாக விபரங்களை தெரிவிக்கலாம் .

News March 10, 2025

தேனியில் இந்த உணவுதான் பேமஸ்

image

தேனி மாவட்டம் என்றாலே அழகும் இயற்கையும் நினைவுக்கு வரும் .தேனி பசுமைக்கும் அழகுக்கும் மட்டும் பேமஸ் இல்லை. சாப்பாட்டுக்கும் தான். சின்னமனூரில் கிடைக்கும் அயிரை மீன் குழம்பு சாப்பாடு சாப்பிட்டால், அதன் ருசி எப்போதும் மறவாது. தேனியில் எங்கு சென்றாலும் கிடைக்கும் தேனி ஸ்பெஷல் நாட்டு கோழி பெப்பர் கிரேவி சாப்பிடாதவர்களே இருக்க முடியாது. இன்னுமும் இதனை சாப்பிடாத உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News March 10, 2025

12 காட்டுப்பன்றிகள் லாரி மோதி உயிரிழப்பு

image

பெரியகுளம், தேவதானப்பட்டி ரோடு பழைய வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியிலிருந்து இரை தேடி ரோட்டை கடக்க முயன்ற 10 குட்டிகள் உட்பட 12 காட்டுப்பன்றிகள் மீது அடையாளம் தெரியாத லாரி மோதியதில், 12 காட்டுப்பன்றிகளும் இறந்தன. அப்பகுதி இருட்டாக இருந்ததால், அடுத்தடுத்த வாகனங்கள் இறந்த பன்றிகள் மீது ஏறி சென்றன. டூ வீலரில் சென்றவர்கள் தகவலின்படி, வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

News March 10, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 09.03.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News March 9, 2025

பேராசிரியைக்கு பாராட்டு தெரிவித்த ஓபிஎஸ்

image

“எண்டே ஆண்கள்” என்கிற மலையாள நூலை “எனது ஆண்கள்” என்ற தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்ததற்காக சாகித்ய அகாடமி விருதினை உலக மகளிர் தினத்தில் பெற்றுள்ள திருநெல்வேலியைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியை விமலாவுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள். இது போன்று பல நாவல்களை தமிழில் மொழி பெயர்த்து தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்யவும் வாழ்த்துக்கள்” என தேனி மாவட்டம் போடி எம்எல்ஏ ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

News March 9, 2025

தேன் உற்பத்தி பயிற்சி: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

image

தேனி அருகே உள்ள கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவச தேன் உற்பத்தி பயிற்சி நாளை 10.03.2025 முதல் நடைபெற உள்ளது. இந்த வகுப்பில் சேர விரும்பும் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என பயிற்சி வகுப்பு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தொடர்புக்கு இந்த 9500314193, 9043651202, 04546-251578 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த வகுப்பிற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.

News March 9, 2025

தேனி :1021 வழக்குகளில் ரூ.64.06 கோடிக்கு தீர்வு

image

தேனி மாவட்டத்தில் உள்ள தேனி மாவட்ட நீதிமன்றம், பெரியகுளம் நீதிமன்றம் , உத்தமபாளையம் நீதிமன்றம், போடி நீதிமன்றம் மற்றும் ஆண்டிபட்டி நீதிமன்றங்களில் நேற்று (மார்ச் .8) லோக் அதாலத் நிகழ்வு நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் மொத்தம் 1021 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு அத்தகைய வழக்குகள் மூலம் ரூ.64,06,39,366-க்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக நீதித்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!