India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மக்களே,சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது பலரது வாழ்க்கை கனவாக உள்ளது. ஆனால், கடும் விலை உயர்வால், அது பலருக்கு எட்டாத கனியாகவே உள்ளது. இதை மாற்ற தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அரசு மானிய விலையில் வீடு வழங்குகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் <

போடியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (58). இவரது மகள் காயத்ரியை, ரஞ்சித்குமாா் (25) என்பவர் காதல் திருமணம் செய்தாா். தற்போது இந்த தம்பதி பிரிந்து வாழ்கின்றனா். இந்நிலையில் நேற்று முன்தினம் ரஞ்சித்குமாா் மது போதையில் ரவிச்சந்திரன் வீட்டுக்கு சென்று மனைவி காயத்ரியுடன் தகராறு செய்தாா். இதைத் தட்டிக் கேட்ட ரவிச்சந்திரனை கத்தியால் குத்தி தாக்கி உள்ளார். போடி போலீசார் ரஞ்சித்குமாா் மீது வழக்கு (அக்.23) பதிவு

பெரியகுளம் தென்கரைப் பகுதியில் அமைந்துள்ள பாலமுருகன் திருக்கோவிலில் வீற்றிருக்கும் முருகனுக்கு சஷ்டி விரத இரண்டாம் நாளை முன்னிட்டு நேற்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முருகன் வெள்ளை சாத்தி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த முருகனை ஏராளமான பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர்.

தேனி மாவட்டத்தில் இன்று 23.10.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை தேனி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் உங்கள் போனில் உள்ளதா? இல்லை என்றால் இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு அலைவதை தவிர்கவும்.
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ். SHARE IT

தேனி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இங்கே <

கம்பம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (78). இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில் இவரது இரண்டாவது மகனான சரவணன் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்து வந்த ஆறுமுகம் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்கு (அக்.22) பதிவு செய்து விசாரிகின்றனர்.

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. ஆரம்ப நாள்: 21.10.2025
4. கடைசி தேதி : 20.11.2025
5. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <

கடமலைக்குண்டு, வைகை நகரை சோ்ந்தவா் தெய்வேந்திரன் (22). இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்த நிலையில் மது அருந்திவிட்டு அடிக்கடி குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் மதுபோதையில் தெய்வேந்திரன் தனது அக்காவுடன் தகராறு செய்துள்ளார். கோபமடைந்த அக்கா தேவேந்திரனை கண்டித்த நிலையில் அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடமலைக்குண்டு போலீசார் வழக்கு பதிவு.

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (அக்.24) நடைபெறவுள்ளது. இம்முகாமில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், அதற்கு குறைவான கல்வித்தகுதி உடையவர்கள், டிகிரி, ஐடிஐ, நர்சிங், தையல் பயிற்சி முடித்தவர்கள் பங்கேற்கலாம்.ரூ.25,000 வரை சம்பளம் வழங்கப்படும். விவரங்களுக்கு 98948-89794 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவும்.
Sorry, no posts matched your criteria.