Theni

News April 12, 2024

சின்னமனூரில் சித்திரைத் திருவிழா ரத்து

image

தேனி மாவட்டம் சின்னமனூரில் அமைந்துள்ள பூலாநந்தீஸ்வா் திருக்கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு பணிகள் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக சித்திரை திருவிழா கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் 2 ஆம் ஆண்டாக தற்போதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் திருக்கல்யாணம் மட்டும் வருகின்ற ஏப்.20 ஆம் தேதி நடைபெறும் என கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

News April 12, 2024

அடுத்த 4 நாட்களுக்கு மழை

image

தேனி உட்பட தமிழ்நாட்டில் உள்ள 13 மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார். அதன்படி தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15 ஆம் தேதிக்குப் பிறகு டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 11, 2024

ஆட்சியர் தலைமையில் நடைபயண பேரணி

image

2024 மக்களவை தேர்தலையொட்டி 100 % வாக்களிப்பதன்
அவசியம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தலைமையில்
நடைப்பயண பேரணி 5-ம் நாளான இன்று (11.04.2024) ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதியில் நடைபெற்றது. இப்பேரணியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News April 11, 2024

போடி ரயில் நிலையத்தில் அதிரடி சோதனை

image

போடிநாயக்கனூர் ரயில்வே நிலையத்தில் இன்று சென்னையிலிருந்து கரூர், ஈரோடு, மதுரை மார்க்கமாக போடிநாயக்கனூர் வந்த ரயிலில் வந்த பயணிகளிடம் தேர்தல் பறக்கும்படையினர் மற்றும் ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் உள்ளதால் கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் பரிசுப்பொருட்களை அனுமதி இன்றி கொண்டுவரப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

News April 11, 2024

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தேனி நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு அளித்தனர். இதில் தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் மூத்த குடிமக்கள் 576,மாற்றுத்திறனாளிகள் 586 என மொத்தம் 1162 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அலுவலர் ஷஜீவனா அறிவித்துள்ளார்.

News April 10, 2024

தேனி: முதல்வர் தீவிர ஆலோசனை

image

தேனி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வனை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக தேனி வந்துள்ள முதல்வர் ஸ்டாலின் திமுக மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் சங்கரை சந்தித்து தேர்தல் நிலவரம் குறித்து விவாதித்தார்.

News April 10, 2024

தேனி அருகே விபத்து

image

ஆண்டிபட்டி  அருகே உள்ள எஸ்எஸ் புரம் பகுதியில் கேரளாவில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. இதில், காரில் பயணித்த தம்பதி மற்றும்  குழந்தை படுகாயமின்றி உயிர் பிழைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆண்டிபட்டி போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.  

News April 10, 2024

700 மதுபாட்டில்கள் பறிமுதல் அதிரடி வழக்கு பதிவு

image

கம்பம் பகுதியில் 700 மது பாட்டில்களை பதுக்கிய வழக்கில் கம்பம் தெற்கு போலீஸார் கண்ணன் என்பவரை கைது விசாரணை நடத்தினர். அதில் கம்பம் 17 ஆவது வார்டு திமுக செயலாளரான மணிகண்டன் என்பவர் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து மணிகண்டன் என்பவர் மீது நேற்று (ஏப்.9) போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News April 10, 2024

வைகை அணையில் இருந்து கள்ளழகர் ஆற்றில் இறங்க தண்ணீர் திறப்பு

image

மதுரை சித்திரை திருவிழா வருகின்ற 19 ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இந்த மாதம் 23 ஆம் தேதி பிரசித்தி பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா நடைபெறுகிறது. இதற்காக‌ ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 19 ஆம் தேதியில் இருந்து 23ஆம் தேதி வரையில் மொத்தமாக 216 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

News April 9, 2024

ஏழைகளுக்கும், பணக்காரருக்கும் நடைபெறும் தேர்தல்

image

போடிநாயக்கனூர் பகுதிக்கு வருகை தந்த திமுக பேச்சாளர் திருச்சி சிவா திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வருகின்ற 19ஆம் தேதி ஏழைகளுக்கும், பணக்காரருக்கும் நடைபெறும் தேர்தல் இது; இந்திய நாட்டின் தலையெழுத்தை மாற்றக்கூடிய உங்கள் வாக்கை திமுகவிற்கு வாக்களியுங்கள் என்று கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

error: Content is protected !!