India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆண்டிபட்டி அருகே உள்ள சங்கரமூர்த்திபட்டியைச் சார்ந்த நாகராஜ் -ரம்யா ஆகியோரின் மகன் மோகித்குமார்(வயது 10) தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்து கொண்டிருந்தார்.கடந்த சில தினங்களுக்கு முன் காய்ச்சலால் தேனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவர் மோகித்குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதே போல் ஒரு சில மாணவர்களுக்கும் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்

க.விலக்கு டூ கண்டமனூர் செல்லும் சாலையில் அண்ணா நுற்பாலைக்கு பின்புறத்தில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மரத்தில் இறந்த நிலையில் தொங்கிக் கொண்டு இருப்பதாக க.விலக்கு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, தற்கொலையா? கொலையா? என்று கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் அக்.22ஆம் தேதி காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தவறாமல் கலந்து கொண்டு தங்கள் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி தீர்வு காணலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 1,432 மாற்றுத்திறனாளி மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்காக பள்ளிக்கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து 8 வட்டாரங்களில் ஒரு பள்ளியை தேர்வு செய்து மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. முகாமில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இலவச ரயில், பஸ் பாஸ் வழங்குதல், உதவி உபகரணங்கள் பெறுவதற்கு விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நாளை(அக்.19) போடி சி.பி.ஏ., கலை அறிவியல் கல்லூரியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. முகாமில் பங்கேற்கும் வேலை தேடும் இளைஞர்கள் கல்விச்சான்றுநகல்கள், ஆதார் நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும். பங்கேற்பவர்கள் https://www.tnprivatejobs.tngov.in/ என்ற இணைய முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாளை(அக்.19) பொதுவிநியோகம் திட்ட குறைதீர் முகாம் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு நடைபெறும் முகாமில் அந்தந்தப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், நுகர்வோர் நடவடிக்கை குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கடை மாற்றம், நியாய விலை கடைகளின் குறைபாடுகள் உள்ளிட்டவைகளை மனுவாக அளித்து தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் மதுரை கல்லூரியில் படித்து வருகிறார். இவர் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்திருந்தவர், மீண்டும் கல்லூரிக்கு செல்வதற்காக அழகுமுருகனின் ஆட்டோவில் ஆண்டிபட்டி பேருந்து நிலையத்துக்கு சென்றார். அப்போது ஆட்டோவில் மாணவிக்கு அழகுமுருகன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரில் ஆண்டிபட்டி போலீசார் அழகுமுருகனை நேற்று (அக்.16) கைது செய்தனர்.

தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 18.10.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தலைமையில் சின்னமனூர் கவிப்பிரியா திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும் மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்கூட்டம் (Civil Supplies Grievance meeting) மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் வரும் 19ம் தேதி அந்தந்த பகுதியில் நடைபெறும் என்றும், இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் ஷஜீவனா இன்று (அக்.16) தெரிவித்துள்ளார்.

வீரபாண்டியை சேர்ந்த உலகநாதன் (34) என்பவர் கடந்த 2020- ம் ஆண்டு அண்ணன், தம்பிகளான 7, 10 வயதுடைய இரு சிறுவர்களை அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளர். இதுகுறித்த புகாரில் போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று(அக்.15) உலகநாதனுக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிபதி வி.கணேசன் தீர்ப்பளித்தார்.
Sorry, no posts matched your criteria.