India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஜூடோ போட்டியில் இந்தியா முழுவதும் இருந்து 450 பள்ளிகள் பங்கு பெற்றன. இதில் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கம்பம் ஆர்.ஆர். இன்டர்நேசனல் பள்ளி மாணவர் ரினோஸ்வாசன் மூன்றாமிடம் பெற்று வெண்கல பதக்கம் வென்றார். வெற்றி பெற்ற மாணவருக்கு நேற்று(அக்.22) பள்ளி நிர்வாக குழு சார்பில் தங்க நாணயத்தை பள்ளியின் தாளாளர் ராஜாங்கம் வழங்கி பாராட்டினார்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று உள்ள கூட்டரங்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து பட்டாசு கடைகளிலும் முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா கடை முன்பு தீ விபத்து ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஆய்வு மேற்கொள்ள வேண்டும்

சுருளி அருவியில் இன்று(அக்.22) குளிக்க தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. சுருளி அருவியில் நீர்வரத்து சீரானதால் பொதுமக்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கனமழையால் குளிக்க சுருளி அருவியில் தடை செய்யப்பட்டிருந்தது. 2 நாட்களாக குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று(அக்.22) தடை நீக்கம் செய்யப்பட்டவுடன் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் இன்று(அக்.22) இரவு 7 மணி வரை, இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனால் தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் மாவட்ட தொழில் மையம் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக குழு சிறு மற்றும் நடுத்தர தொழில் தொடங்குவதற்கான 30 நபர்களுக்கு ரூ.8.49 கோடி மதிப்பீட்டில் வங்கி கடனுதவிகளுக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா வழங்கினார்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தலைமையில் இன்று(அக்.22) செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து குறைகளுக்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.

சுருளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவியாக பதவி வகித்த நாகமணி மீது ஊராட்சிமன்றத்தை சேர்ந்த 10 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வந்தனர். மேலும் ஊராட்சி மன்ற செயல்பாடுகளில் நாகமணியின் கணவர் ஆதிக்கம் செலுத்துவதாக புகார்எழுந்துள்ளது.இந்நிலையில் நாகமணியை பதவிநீக்கம் செய்து கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார்.

மயிலாடும்பாறை அருகே கருமலைசாஸ்தாபுரம் கிராமம் உள்ளது. மலையடிவாரத்தில் அமைந்துள்ள கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றனர் இவர்கள் ஆடு.மாடுகளை மேய்ச்சலுக்கு மலையடிவாரத்திற்கு கொண்டு செல்வார்கள். இப்படி சென்றதில் ஆடு ஒவ்வொன்றாக காணாமல் போனதை கண்ட நபர் மேய்ச்சலுக்கு கொண்டு செல்வதை ஓரிரு தினம் நிறுத்தவே ஆட்டைத் தேடி வந்த சிறுத்தையை கண்டு வனத்துறையினரிடம் கூறினர்

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் வழங்கப்பட்ட தமிழ்நாடு அரசு கனவு ஆசிரியர் விருது 2023 பெற்ற சங்கீதா பட்டதாரி ஆசிரியையை தேனி மாவட்ட எம்.பி தங்க தமிழ் செல்வன் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சரவணக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

ஜவுளித்துறையில் மண்டல வாரியாக டிஜிட்டல் முறையில் மேம்படுத்தி பயிற்சியாளர்களை உருவாக்க உள்ளனர். மேலும் இதுபற்றி குறித்த தகவல்களுக்கு மண்டல துணை இயக்குநர் அலுவலகம் துணிநூல்துறை அறைஎண்:502, 5ஆம் தளம் மாவட்ட ஆட்சியர் வளாகம் திருப்பூர் மாவட்டம் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது 0421 – 2220095 என்ற தொலைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்
Sorry, no posts matched your criteria.