Theni

News April 29, 2024

தேனி: பெண்ணை தாக்கிய கும்பல்

image

கெங்குவார்பட்டியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் காட்ரோட்டில் டீக்கடை நடத்தி வருகிறார். 6 மாதங்களுக்கு முன்பு பால்பாண்டி என்பவரிடம் ரூ.5 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கி அதில் ரூ.1 லட்சத்தை திருப்பிக் கொடுத்துள்ளார். மீதி பணத்தை ஒரு சில நாட்களில் கொடுப்பதாக தெரிவித்த நிலையில் பால்பாண்டி சிலருடன் வந்து பணத்தை உடனே தரும்படி கூறி மகேஸ்வரியின் தாக்கியுள்ளார்.

News April 28, 2024

தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி

image

வீரபாண்டி மாரியம்மன் கோயில் திருவிழா மே 7 முதல் மே 14 வரை நடக்கிறது. பக்தர்களுக்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் கோயில் நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடந்து வருகிறது. திருவிழாவிற்காக பெரியகுளம், தேனி, ஆண்டிப்பட்டி, போடியில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பஸ்கள் நிற்பதற்கான தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி இன்று துவங்கியது.

News April 28, 2024

தேனி: பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்த நகராட்சி

image

தேனி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்க கூடிய பொதுமக்களுக்கு வைகை ஆற்றில் உள்ள உறை கிணறுகள் மற்றும் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோடை வெயிலின் தாக்கத்தின் காரணமாக ஆறுகளில் நீர் வரத்து குறைந்துள்ளதால் அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்க கூடிய பொதுமக்கள் குடிநீரினை சிக்கனமாக பயன்படுத்துமாறு நகராட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

News April 28, 2024

தேனி அருகே ஒருவருக்கு கத்தி குத்து 

image

தேனி மாவட்டம் அய்யம்பட்டியில் கோயில் திருவிழாவையொட்டி நேற்று முன் தினம் (ஏப்.26) இரவு ஆடலும், பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட தகராறில் கமலேஷ் (18) என்பவரை சுதாகா், அவரது தந்தை பாரதிராஜா உள்ளிட்ட 7 பேர் தாக்கி, கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரில் சின்னமனூர் போலீசார் சுதாகர்,அவரது தந்தை பாரதிராஜாவை நேற்று (ஏப்.27) கைது செய்தனா்.

News April 28, 2024

முதலமைச்சரின் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு 

image

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் பொருட்டு முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 3 ஆண்கள், 3 பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் விருது, ரூ 1,00,000 ரொக்கம், பாராட்டுப் பத்திரம், பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும். 15 முதல் 35 வயது வரையுள்ளவர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News April 28, 2024

கெளமாரியம்மனுக்கு சிறப்பு பூஜை

image

தேனி மாவட்டம் வீரபாண்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கெளமாரியம்மன் கோவில் உற்சவ திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இதனை அடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

News April 27, 2024

பேபி புடலங்காய் விலை உயர்வு

image

கம்பம் அருகே உள்ள காமயவுண்டன்பட்டி நாராயணதேவன் பட்டி உள்ளிட்ட கிராமங்களில் கிணற்று பாசனம் மூலம் புடலங்காய் முட்டைக்கோஸ் பீட்ரூட் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில் பேபி புடலங்காய் தற்போது நல்ல விலை கிடைத்துள்ளதாக விவசாயி சங்கிலி தெரிவித்தார். கிலோ மூன்று ரூபாய்க்கு எடுத்து வந்த நிலையில் தற்போது கிலோ ரூபாய் 15க்கு வாங்கி செல்கின்றனர் என மகிழ்ச்சியாக தெரிவித்தார்.

News April 27, 2024

வைகை அணையின் நீர்மட்டம் 57.41 அடியாக குறைவு

image

ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாத காரணத்தால் நீர்வரத்து அடியோடு நின்று விட்டது. மேலும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைந்து விட்டது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து தற்போது 57.41 அடியாக குறைந்து காணப்படுகிறது.

News April 27, 2024

கோடைகால பயிற்சி முகாம்

image

தேனி மாவட்டத்தில் உறைவிடம் சாரா கோடைக்கால பயிற்சி முகாம் 15 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் கபடி, கால்பந்து, வாலிபால், கூடைப்பந்து, ஹாக்கி போட்டிகள் 29.04.24 முதல் 13.05.24 வரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடத்தப்படவுள்ளது. அதற்கு பயிற்சி கட்டணம் ரூ.200 வீதம் ஆன்லைன்/Pos machine மூலமாக மட்டுமே பெறப்படும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை 7401703505 தொடர்பு கொள்ளலாம்.

News April 27, 2024

ஆட்டுக் கொல்லி நோய் முகாம்

image

தேனியில் 46,144 செம்மறியாடுகளும் 60,081 வெள்ளாடுகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்திலுள்ள 53 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 3 கால்நடை மருத்துவமனைகளில் கால்நடை உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட 53 குழுக்கள் அமைத்து, ஏப் 29 முதல் மார்ச் 28 வரை 30 நாட்களுக்கு தடுப்பூசிப் பணி இலவசமாக மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!