India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த கம்பம் நகரில் அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்களால் பெரிய அளவில் இடையூறு ஏற்படுகிறது. இதுதொடர்பாக ஆணையாளருக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் வாசுதேவன், நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உரிய அனுமதி இன்றி பொதுமக்கள் பேனர் வைத்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆண்டிபட்டி, கன்னியப்பிள்ளைபட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (65). இவர் 7ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அச்சிறுமியின் தாயார் கேட்டபோது அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.சிறுமியின் தாயார் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பழனிச்சாமி மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், வாக்கு எண்ணிக்கை மையத்தில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் நேற்று (25.05.2024) நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கலந்து கொண்டனர்.
சின்னமனூரில் நகர்ப்புற சுகாதார நிலையத்திற்கென கருங்கட்டான்குளத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. புதிய கட்டடம் 20 நாட்களுக்கு முன் சுகாதாரத் துறையினரிடம் நகராட்சி நிர்வாகம் ஒப்படைத்தது. இந்நிலையில் அத்தகைய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் தற்போது வரை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
தேனி மாவட்டத்தில் நேற்று (மே.24) பதிவான மழைப்பொழிவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பெரியாறு பகுதியில் 8 செ.மீட்டரும், தேக்கடியில் 3செ.மீட்டரும், கூடலூர், போடிநாயக்கனூரில் 1 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.
போடி ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் செல்வி. இவருக்கும் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் கோமதி என்பவருக்கும் பொது சுவர் குறித்து பிரச்சனை ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 19ம் தேதி செல்வியை கோமதியும் அவரது கணவர் பைரவகுமாரும் சேர்ந்து அசிங்கமாக பேசி அடித்து உதைத்துள்ளனர். இதுகுறித்து செல்வி நேற்று போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்
தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் உள்ள உரம் பூச்சி மருந்து கடைகளில் சிவகங்கை மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) பரமேஸ்வரன், வேளாண் அலுவலர்கள் பாலகணபதி, நாகராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர். பல மாதங்களுக்குப் பின் பெய்து வரும் மழையால் விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த உரத்தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க இந்த திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கோவையில் வசித்தவர் இந்திராணி. இவர் பிசி பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். சித்தபிரமை நோயால் அவதிப்பட்ட இவர் 17ம் தேதி வீட்டில் யாருக்கும் தெரியாமல் வெளியேறி மர்மமான முறையில் அல்லிநகரம் பைபாஸில் தலையில் அடிபட்ட நிலையில் கிடந்தார். தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து கோவையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
பெரியகுளம் T.கள்ளிப்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் திருவிழாவை பார்ப்பதற்காக மகனை அழைத்துக் கொண்டு ஆட்டோவில் சென்றபோது 3 நபர்கள் ஆட்டோவை மறித்து ஆட்டோவில் ஏறினர். அப்போது அவர்கள் ஆக்ஸிலேட்டரை திரிகியுள்ளனர். அதற்கு செந்தில்குமார், கண்டித்ததால் 3 பேரும் சேர்ந்து செந்தில்குமார் மற்றும் அவரது அண்ணன் இருவரையும் தாக்கியுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலுார் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சுரங்கனாறு நீர்வீழ்ச்சி. இடுக்கி மாவட்டத்தில் மழை பெய்யும் போது இங்கு தண்ணீர் கொட்டும். வனப் பகுதியில் அமைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் இங்கு செல்ல அனுமதியில்லை. கடந்த 4 மாதங்களாக நீர்வரத்தின்றி வறண்டு காணப்பட்ட நிலையில் தற்போது பெய்த மழையால் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துச் செல்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.