India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை(அக்.27) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஒன்றிய தமிழக வெற்றிக் கழகத்தின் மாணவரணியின் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.
தேனி மாவட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்குவதற்காக சிறப்பு மருத்துவ முகாம் அக்.28ஆம் தேதி பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெறவுள்ளதாக தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். இந்த சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற உள்ளதால் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.(பகிரவும்: SHARE IT)
தேனி மாவட்டத்தில் 2024ஆம் ஆண்டு முதல் 2027ஆம் ஆண்டு வரையிலான ஆதி திராவிடர் நலக்குழு, விழிப்பு, கண்காணிப்புக் குழு நியமிக்கப்பட உள்ளது. இந்தக் குழுக்களில் உள்ள பதவிகளுக்கு தகுதியுள்ளவர்கள் வருகிற நவ.10ம் தேதி மாலை 5 மணிக்குள் தேனி மாவட்ட ஆதி திராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரிலும், தபால் மூலமும் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் நாளை (அக்.26) கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டத்தில் இன்று (அக்.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக தேனியில் நாளை அனைத்து வகையான பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏற்கனவே அரசுப் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வருசநாடு பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு 14 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் பாலமுருகனை கைது செய்தனர். மேலும் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் இன்று (அக்.25) பாலமுருகனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
தேனி மாவட்டம் கால்நடை தீவனப் பயிர் வளர்ப்பு மற்றும் புல் நறுக்கும் கருவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பம் உள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா இன்று (அக்.25) தெரிவித்துள்ளார். தங்கள் வளர்க்கும் கால்நடைகளின் விவரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை அந்தந்த பகுதியில் உள்ள கால்நடை மருத்துவ நிலையத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியர்களுக்கு வீடு தேடி வந்து டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் வழங்கும் திட்டத்தில் பயன்பெறலாம். இச்சேவையை பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் அருகில் உள்ள தபால் நிலையங்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் https://ccc.cept.gov.in/servicerequest/request.aspx என்ற இணைய முகவரி மூலமும், Postinfo செயலியை பதிவிறக்கம் செய்தும் கோரிக்கையை பதிவு செய்யலாம் என தேனி கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக இம்மாத தொடக்கத்தில் இருந்து நேற்று(அக்.24) வரை மாவட்டத்தில் மொத்தம் 32 வீடுகள் சேதமடைந்துள்ளன. பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு அரசு பேரிடர் நிதியில் இருந்து தலா ரூ.4 ஆயிரம் வீதம் 19 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.