Theni

News December 11, 2024

தவெக அலுவலகத்தை திறப்பதை நிறுத்திய காவல்துறை

image

தேனி மாவட்டம் சின்னமனூர் நகர கழக சார்பில் தமிழக வெற்றிக்காக கட்சி அலுவலகம் இன்று மாவட்ட தலைவர் லெப்ட் பாண்டி, தலைமையின் திறக்க இருந்த நிலையில் இன்று சின்னமனூர் காவல்துறையினர் கட்சி அலுவலகத்தைதிறக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். காவல் துறையினர் தங்களிடம் அனுமதி வழங்கவில்லை என்று காவல் துறையினர் கூறினர் இதனால் அப்பகுதியில் பரபரபு எற்பட்டது.

News December 11, 2024

கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

image

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி சந்தானலட்சுமிக்கும் சுரேஷ் என்பவருக்கும் தகாத உறவு இருந்த நிலையில் அதைராமன் கண்டித்துள்ளார். இதன் காரணமாக சுரேஷ், சந்தானலட்சுமி, செல்லத்துரை, பாண்டி ஆகியோர் சேர்ந்து ராமனை கொலை செய்தனர். இந்த வழக்கு பெரியகுளம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தீர்ப்பாக நேற்று (டிச.10) 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

News December 11, 2024

பாலியல் வழக்கு குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை 

image

தேனி அருகே  குன்னூர் பகுதியைச் சேர்ந்த வெள்ளைத்துறை என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில் மாவட்ட சிறப்பு போக்ஸோ நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை முடிவடைந்து குற்றம் சாட்டப்பட்டுள்ள வெள்ளைத் துறைக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

News December 10, 2024

கொலை செய்ய முயன்ற குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

image

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி பகுதியை சேர்ந்த சின்னன் என்பவரை அறிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற வழக்கில் போலீசாரால் முத்தையா என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவ் வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று வழக்கின் தீர்ப்பாக குற்றவாளி முத்தையாவிற்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அனுராதா தீர்ப்பளித்துள்ளார்.

News December 10, 2024

கஞ்சா வழக்கில் பெண்கள் இருவருக்கு 10 ஆண்டு சிறை

image

தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி போலீசார் கடந்த 2023 ஆம் ஆண்டு நடத்திய சோதனையில் 25.390 கிலோ கஞ்சாவுடன் மஞ்சுளா, விமலா ஆகிய இரு பெண்களை கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு விசாரணை மதுரை மாவட்ட EC மற்றும் NDPS சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கின் தீர்ப்பாக இன்று குற்றவாளிகள் இருவருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.2,00,000 அபராதம் விதித்து நீதிபதி அல்லி தீர்ப்பளித்தார்.

News December 10, 2024

ரயில் வழித்தட பொதுமக்களுக்கு எச்சரிக்கை

image

மதுரை – போடி ரயில் வழித்தடத்தில் நாளை (டிச.11) வழக்கமான தண்டவாள உறுதி தன்மை ஆய்வு ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. எனவே மதுரை – போடி ரயில் வழித்தடத்தில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், மாலை 5 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு 6 மணிக்கு போடி வரும் ரயில் மீண்டும் 06:30-க்கு புறப்பட்டு 08:15 க்கு மதுரை செல்லும் என ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 10, 2024

இரு மாநில எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்

image

தேனி மாவட்டம், குமுளி வழியாக கேரளா மாநிலத்திற்கு சரக்கு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் மற்றும் தற்போது சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் என்பதால் அதன் வாகனங்கள் இந்த பாதை வழியாக சென்று வருகின்றன. வாகனங்களை சாலை ஓரம் நிறுத்திவிட்டு ஓட்டல்கள் மற்றும் கடைகளுக்கு சென்று விடுகின்றனர். இதனால் குமுளி எல்லைப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அதனை சீர்செய்ய கூடுதல் போலீசார் அமர்த்த கோரிக்கை

News December 10, 2024

தேசிய தொழிற் சான்றிதழ் பெற்றவர்களுக்கு பொதுத்தேர்வு

image

தேனி மாவட்டத்தில் தேசிய தொழிற் சான்றிதழ்(NTC)/தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ்(NAC) பெற்ற பயிற்சியாளர்கள் பத்தாம் வகுப்பு/மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகளுக்கு தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் 17.12.2024 அன்று வரை மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்க சேவை மையங்களில் பதியலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News December 10, 2024

தேனியில் வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்

image

தேனி மாவட்டம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வருகின்ற 20.12.2024 அன்று நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி (04546 – 254510 அல்லது 76959 73923) எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என இன்று
தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News December 10, 2024

கம்பம் நகராட்சியுடன் மூன்று ஊராட்சிகள் இணைப்பு

image

கம்பம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, ஆங்கூர் பாளையம் ஆகிய 3 ஊராட்சிகள் மற்றும் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியின் 12-வது வார்டின் ஒரு பகுதி (வரதராஜபுரம் கிழக்கு தெரு), புதுப்பட்டி பேரூராட்சி 5-வது வார்டின் ஒரு பகுதி உதயம் நகர் ஆகியவை கம்பம் நகராட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு கூட்டம் நாளை (டிச. 11) மாலை நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

error: Content is protected !!