Theni

News August 7, 2024

தேனி மாவட்டத்தில் 12,163 பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள்

image

தேனி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகள், உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் பிளஸ்1 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் ஆண்டு தோறும் சைக்கிள் வழங்கப்படுகிறது. தேனி மாவட்டத்தில் இந்தாண்டு ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 12,163 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட உள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 7, 2024

அரசு பெண்கள் ஐ.டி.ஐ.,யில் சேர்க்கை தேதி நீட்டிப்பு

image

ஆண்டிபட்டி அரசு பெண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024ம் ஆண்டிற்கான மாணவியர் நேரடி சேர்க்கைக்கான தேதி ஜூலை 31ல் முடிவதாக இருந்தது. இந்நிலையில் தற்போது ஆகஸ்ட் 16 வரை சேர்க்கை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை மாணவிகள் பயன்படுத்தி தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News August 7, 2024

உணவுப் பொருட்கள் வழங்கல் சம்பந்தமாக குறை கேட்கும் கூட்டம்

image

தேனி மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமாக பொதுமக்கள் குறைகேட்கும் கூட்டம் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெற உள்ளதாக தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். மேலும் இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகள் மற்றும் பிரச்சனைகளை மனுக்களாக வழங்கி தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 7, 2024

பெண் குழந்தைகள் திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு

image

சமூக நலத்துறையின் கீழ் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தேனி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து வைப்புத்தொகை ரசீது பெற்ற பயனாளிகளில் முதிர்வுத் தொகை கிடைக்க பெறாமல் உள்ள 18 வயது நிரம்பிய பயனாளிகள் முதிர்வுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நல அலுவலகத்தை அனுகலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 6, 2024

பூச்சி, நோய் தாக்குதலை கட்டுப்படுத்த ஆலோசனை

image

தேனி மாவட்ட விவசாயிகள் நெல் சாகுபடியில் ஏற்படும் பூச்சி, நோய் தாக்குதலை கட்டுப்படுத்த உரமாக யூரியா அதிக அளவில் இடக்கூடாது. யூரியாவை 3 முறை பிரித்து இட வேண்டும். வரப்புகளில் புல், பூண்டுகள் இல்லாமல் சுத்தமாக வைக்க வேண்டும். இரவு 7 முதல் 9 மணி வரை விளக்குப் பொறி வைக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மை துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.

News August 6, 2024

தபால் அலுவலகங்களில் தேசிய கொடி விற்பனை

image

தேனி மாவட்டத்தில் உள்ள தபால் அலுவலகங்களில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, ‘இல்லந்தோறும் மூவர்ணக் கொடி 2024’ என்ற திட்டத்தின் கீழ் தேசிய கொடி ரூ.25க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் அருகில் உள்ள தபால் அலுவலகங்களுக்கு சென்று தேசிய கொடி வாங்கிக் கொள்ளலாம். http://www.epostoffice.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து தபால்காரர் மூலம் வீட்டிலேயே பெற்றுக் கொள்ளலாம் என தபால்துறை அறிவிப்பு.

News August 6, 2024

அரசு சாா்பில் ரூ.3 லட்சம் மானியம் – ஆட்சியர்

image

தேனியில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா், சீா்மரபினரின் பொருளாதார முன்னேற்றத்துக்கு ஆயத்த ஆடை உற்பத்தி நிலையம், நவீன சலவையகம் அமைக்க அரசு சாா்பில் ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News August 6, 2024

ஆயத்த அடையாள உற்பத்தி மற்றும் நவீன சலவையகம் அமைக்க ஆட்சியர் அழைப்பு

image

தேனி மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், சீர்மரபினர் சார்ந்த வகுப்பினருக்கான பொருளாதாரத்தை முன்னேற்றும் விதமாக ஆயத்த அடையாள உற்பத்தி மற்றும் நவீன சலவையகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். மேலும் இந்தத் திட்ட மூலம் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 5, 2024

தேனி மாவட்ட காவல்துறை மக்களுக்கு எச்சரிக்கை

image

தேனி மாவட்ட காவல்துறை இன்று (ஆக.05) பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை அறிவித்துள்ளது. அதில் ஆன்லைன் மூலம் தங்களுக்கு கடன் வழங்குவதாக கூறி தங்களது புகைப்படங்களை பெரும் அந்த மோசடி கும்பல் அதனை தவறாக சித்தரித்து தங்களிடம் பண மோசடியில் ஈடுபட முயற்சிப்பர். எனவே பொதுமக்கள் அங்கீகரிக்கப்படாத கடன் செயலிகளை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News August 5, 2024

தேனி மாவட்ட மக்களுக்கு ஜில் நியூஸ்

image

தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு இன்று (ஆக.05) இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி,ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழையும்,விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு லேசான மழையும் இரவு 10 மணி வரை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!