Theni

News August 13, 2024

நீங்களும் அழகுக்கலை நிபுணர் ஆகலாம்

image

தேனி கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கான இலவச அழகு கலை மேலாண்மை பயிற்சி ஆக.19 இல் துவங்குகிறது. ஆர்வமுள்ளவர்கள் தேனி உழவர் சந்தை எதிரே செயல்படும் கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் புகைப்படம், ஆதார் நகல் உடன் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 95003 14193 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

News August 13, 2024

அரசு கலை கல்லுாரியில் சிறப்பு சேர்க்கை முகாம்

image

வீரபாண்டி அரசு கலை கல்லூரியில் நாளை (ஆக.14) சிறப்பு சேர்க்கை முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில் பிளஸ் 2 துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள், பிளஸ் 2 முடித்து இதுவரை உயர்கல்வி சேராத மாணவர்களை பங்கேற்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த முகாமில் பங்கேற்கும் மாணவர்கள் ஆதார், மாற்றுச்சான்றிதழ், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், 5 புகைப்படம் எடுத்து வர அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 13, 2024

தேனியில் வழக்கத்தை விட அதிக மழை

image

தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக தொடர் மழை பெய்து வரும் நிலையில், இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாகவே மழை பெய்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஒப்பிடுகையில் பெய்ய வேண்டிய மழை 14 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. அந்த வகையில் தேனியில் பெய்ய வேண்டிய மழையானது 10% ஆக இருக்கும் நிலையில், இதுவரை 25% பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 13, 2024

தேனியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று(ஆக.,13) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்திருந்தது. அதன்படி தேனி மாவட்டத்தில் இன்று கனமழை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. வெளியில் செல்வோர் முன்னெச்சரிக்கையுடன் குடை எடுத்துச் செல்லவும். தெரிஞ்சங்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 12, 2024

தேனி மஞ்சளார் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

image

தேனியில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக மஞ்சளார் அணையின் நீர்வரத்து 50 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மஞ்சளார் அணையில் இருந்து 50 கன அடியாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது மஞ்சளார் அணையின் நீர் இருப்பு 435.32 கன அடியாக உள்ளது.

News August 12, 2024

தேனி மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்கள்

image

தேனி மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்கள்: ஆண்டிப்பட்டி 50 மி.மீ., அரண்மனைப்புதுார் 16.6, வீரபாண்டி 26.2, பெரியகுளம் 46, மஞ்சளாறு 35, சோத்துப்பாறை 86, வைகை அணை 49, போடி 7.6, உத்தமபாளையம் 7.4, கூடலுார் 8.2, பெரியார் அணை 11, தேக்கடி 4.2, சண்முகா நதி அணை 8.8 மி.மீ., தேனி மாவட்டம் முழுவதும் மொத்தம் 27.3 மி.மீ., மழை பதிவானது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News August 12, 2024

தேனி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று(ஆக.12) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. அதன்படி தேனி மாவட்டத்திலும் கனமழை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. வெளியில் செல்வோர் முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர். SHARE IT

News August 12, 2024

கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு

image

தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் ஆக.15 அன்று சுதந்திர தின கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் ஊராட்சி கணக்குகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், துாய்மை பாரத இயக்கம் உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட உள்ளது. எனவே ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று பயனடையுமாறு ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News August 12, 2024

தடுப்பணையில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு

image

தேனி மாவட்டம் சில்லமரத்துப்பட்டியை சேர்ந்தவர் புவனேஸ்வரன்(17). +2 மாணவரான இவர் நேற்று(ஆக.11) தனது நண்பர்களுடன் சீலையம்பட்டி முல்லைப் பெரியாறு தடுப்பணைக்கு சென்று குளித்தார். அப்போது புவனேஸ்வரன் தடுப்பணையில் மூழ்கி மாயமானார். தகவலறிந்து வந்த சின்னமனூர் தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு மாணவரை சடலமாக மீட்டனர். இது குறித்து சின்னமனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News August 11, 2024

தேனியில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் வட தமிழக மாவட்டங்கள், தென் தமிழக உள்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி இன்று இரவு 7 மணி வரை தேனி மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!