Theni

News January 25, 2025

தேனி மாவட்டத்தில் உரம் இருப்பு நிலவரம்

image

தேனி மாவட்டத்தில் நடப்பு பருவ சாகுபடிக்குத் தேவையான உரங்களான யூரியா 1,609 மெ.டன்னும் (MFL, Spic & IFFCO), DAP 645 மெ.டன்னும் (Green star, IPL & IFFCO) பொட்டாஷ் 1,761 மெ.டன் (IPL) மற்றும் கலப்பு உரங்கள் 1.675 மெ.டன்னும் (Fact, GFL, CIL, IFFCO) தனியார் நிறுவனங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவிக்கிறது.

News January 25, 2025

தேனி மாவட்டத்தில் விதை பயிர்கள் இருப்பு விபரம்

image

வேளாண்மை விரிவாக்க மையங்களில் நடப்பு பருவத்தில் விவசாயிகளுக்கு நெல் விதை இதுவரை 171.5 மெ.டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், நெல் விதை 4.82 மெ.டன்னும் சிறுதானியங்கள் 3.70 மெ.டன்னும் (கம்பு கோ 10, குதிரைவாலி MDU 1) பயறு வகை விதைகள் (தட்டை பயிறு, மற்றும் உளுந்து) 12.6 மெ.டன்னும், எண்ணெய்வித்துப் பயிர் விதைகள் (நிலக்கடலை) 5.9 மெ.டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

News January 24, 2025

தொழிற்பள்ளிகள் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கலாம்

image

தேனி மாவட்டத்தில் 2025 -2026 ஆம் கல்வியாண்டில் புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், புதிய தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான அங்கீகாரம் பெற www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News January 24, 2025

இளைஞரை தீ வைத்து எரித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

image

வருசநாடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரை கடந்த 11ஆம் தேதி ஒரு கும்பல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது. அவரை மீட்டு தேனி க.விலக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அதே ஊரைச்சேர்ந்த மலைச்சாமி என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் போலீசார் சிங்கராஜபுரம் கிராமம் வேலு மகன் குமார் என்பவரை கைது செய்தனர்.

News January 24, 2025

இளம் பெண் தற்கொலை போலீசார் விசாரணை

image

போடியை சேர்ந்தவர் வர்ஷாஸ்ரீ (19). இவர் கல்லூரிக்கு சென்ற வந்த நிலையில் படிப்பு சரிவராத காரணத்தினால் பொங்கலுக்கு பின் கல்லூரி செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது பெற்றோர்கள் அவருக்கு வரன் பார்த்த நிலையில் அதில் அவருக்கு விருப்பம் இல்லாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதன் காரணமாக வர்ஷா ஸ்ரீ நேற்று (ஜன.23) அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள் இதுகுறித்து போடி போலீசார் விசாரணை.

News January 24, 2025

சுருளி அருவியில் யானைகள் நடமாட்டம்

image

சுருளி அருவியில் குளிக்க தினமும் 100க்கணக்கில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். தற்போது யானைகள் கூட்டம் அடிக்கடி வந்து செல்கிறது. வெண்ணியாறு பகுதியில் யானைகள் முகாமிடுவது வாடிக்கையாகும்.அப்போது அருவி பகுதியை ஒட்டி யானைகள் திடீர் திடீரென வந்து செல்வதால் அருவியில் குளிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்வது என்பதில் வனத்துறை அதிகாரிகள் குழுப்பத்தில் உள்ளனர்.

News January 23, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று (ஜன.23) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News January 23, 2025

நேதாஜிக்கு தேனி எம்.பி புகழாரம் 

image

அனைத்து பகுதிகளிலும் இன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவுக்கு என முதல் இராணுவத்தைக் கட்டமைத்து இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையை உலகறியச் செய்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த நாளில் அவரது புகழைப் போற்றுவோம் என தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ் செல்வன் புகழாரம் சூட்டினார்.

News January 23, 2025

ஆண்டிபட்டி: லாட்டரி சீட்டு விற்றவர் கைது

image

ஆண்டிபட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அரசு மருத்துவமனை அருகே நின்றிருந்த கொப்பையம்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகன் (51) என்பவரை விசாரணை செய்தபோது, அவரிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 24 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.1500 பணம் பறிமுதல் செய்தனர்.

News January 23, 2025

போலீஸ் போல் நடித்து பணம் பறித்தவர்களிடம் விசாரணை

image

கம்பம் வடக்குபட்டி பகுதியில் நேற்றிரவு 8 மணிக்கு 2 பெண்கள் ஒரு ஆண் என 3 பேர் கொண்ட கும்பல் வீடுகளில் புகுந்து கஞ்சா சோதனை நடத்துவது போல் நடித்து நாங்கள் என்.ஐ.பி.போலீஸ் எனக் கூறி பணம் பறித்துள்ளனர். இவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட பொதுமக்கள் சிலர் வடக்கு போலீசார் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தனர். 3 பேரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று விசாரித்ததில் சின்னமனூரை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

error: Content is protected !!