Theni

News February 12, 2025

ஓபிஎஸ் பெயரில் இருந்த 41 சென்ட் பஞ்சமி நில பட்டா ரத்து!

image

தேனி அருகே அன்னஞ்சி விலக்கு பகுதியில் பட்டியலின மக்களுக்கு மட்டுமே உரிமை உள்ள பஞ்சமி நிலத்தை ஓபிஎஸ் வாங்கியுள்ளதை எஸ்சி, எஸ்டி ஆணையம் உறுதி செய்துள்ளது. அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி 41 சென்ட் பஞ்சமி நிலத்தை வாங்கி தன் பெயருக்கு பட்டா பெற்றதாக அறிவித்து, அந்நிலத்தின் பட்டாவை ரத்து செய்த ஆணையம் சம்பந்தப்பட்ட தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்கவும் நேற்று உத்தரவிட்டுள்ளது.

News February 12, 2025

தேனி மாவட்ட எல்லைகளில் வாகன எண் கண்காணிப்பு கேமரா!

image

தேனி மாவட்ட எல்லைகளில் உள்ள குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு உள்ளிட்ட 7 காவல்துறை சோதனை சாவடிகளில் தானியங்கி வாகன எண் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா நேற்று(பிப்ரவரி 11) தெரிவித்துள்ளார். இந்த கண்காணிப்பு கேமராக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டுப்பாட்டு அறைகளுடன் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என்றார்.

News February 11, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 11.02.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News February 11, 2025

தேனி அருகே 100க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சேதம்

image

ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக தென்னை தோப்புகளில் காட்டு யானைகள் அடிக்கடி புகுந்து மரங்களை அடியோடு சேதம் செய்து வருகிறது. தற்போது இன்று மேலப்பட்டி பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் புகுந்த காட்டுயானைகள் 100க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை நாசம் செய்துள்ளன.

News February 11, 2025

தேனி: அரசு பஸ்சிற்கு முட்டு கொடுக்க தேர் தடுப்பு கட்டை

image

லட்சுமிபுரம் அருகே நேற்று அதிகாலை சாலையில் நின்று கொண்டிருந்தவர் மீது அரசு டவுன் பஸ் பிரேக் பிடிக்காமல் மோதிய விபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்தார். பின் அவர் சிகிச்சைகாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர். விபத்துக்கு காரணமான அரசு பேருந்து நகராமல் இருக்க தேர் தடுப்பு கட்டையை கொண்டு முட்டு கொடுத்து நிறுத்தி உள்ளனர்.

News February 11, 2025

வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

image

தேனி கலெக்டர் ஷஜீவனாவிடம் அகமலை, கரும்பாறை மலை கிராம மக்கள் நேற்று (பிப்.10) மனு வழங்கினர். அதில் தங்கள் கிராமங்களில் வசிக்கும் பழங்குடியினருக்கு நபாா்டு வங்கித் திட்டத்தின் கீழ் நீரோடையிலிருந்து குழாய் அமைத்து குடியிருப்புகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அக்குடிநீர் குழாய்களை வனத் துறையினா் வெட்டி சேதப்படுத்திய நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

News February 11, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 10.02.2025 இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News February 10, 2025

தேனி அருகே விபத்து; சம்பவ இடத்தில் மரணம் 

image

போடி பகுதியை சேர்ந்தவர் சேதுராம் (61). இவர் தனது குழுவினருடன் பழனிக்கு பாதயாத்திரை சென்றுள்ளார். நேற்று (பிப்.9) தோட்டக்கலை கல்லூரி அருகே நடந்து சென்ற போது இவர்களுக்கு பின்னால் வந்த அரசு பேருந்து சேதுராம் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து பெரியகுளம் போலீசார் பேருந்து ஓட்டுனர் தியாகராஜன் மீது வழக்கு பதிவு.

News February 10, 2025

தேனி மாவட்டத்தில் குடற்புழு நீக்க முகாம் 

image

தேனி மாவட்டத்தில் உள்ள 162 துணை சுகாதார நிலையங்கள், 1065 அங்கன்வாடி மையங்களில் குடற்புழு நீக்க முகாம் இன்று (பிப்.10ல்) துவங்குகிறது. இந்த ‘அல்பெண்டசோல்’ மாத்திரைகள் ஒரு வயது முதல் 19 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும், 20 முதல் 30 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதில் 19 மொத்தம் 3.73 லட்சம் பேருக்கு வழங்கப்பட உள்ளது.

News February 9, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று (பிப்.09) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!