India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டத்தில் பெரியகுளம் தாலுகாவில் -9 தேர்வு மையம், உத்தமபாளையம் -15, தேனி -28 என 3 தாலுகாக்களில் 52 தேர்வு மையங்களில் 15,004 பேர் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு எழுத இருந்தனர். ஆனால் இன்று நடந்த குரூப் 2 தேர்வில் 11,279 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். மீதம் 3725 பேர் தேர்வு எழுத வரவில்லை என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் பெரியகுளம், உத்தமபாளையம், ஆண்டிபட்டி மற்றும் போடிநாயக்கனூர் வட்ட சட்டப் பணிகள் குழுவினால் இன்று நீதிமன்ற வளாகத்திலும் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) மூலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் வங்கிகளில் கடனுக்காக 1689 வழக்குகள் விசாரிக்கப்பட்டது. இந்த விசாரணை வழக்குகள் மூலமாக ரூ 178029846/- க்கு தீர்வு காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்ட தமிழக எல்லை குமுளியில் எஸ்ஐ சுனில் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது, காரில் கடத்திய சர்வதேச மதிப்பில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான 60 கிராம் எம்.டி.எம்.எ (மெத்திலின் எடியோக்சி மெத்தாம்பேட்டமைன்) என்னும் தடை செய்யப்பட்ட போதை பொருளையும், காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் அதை கடத்திவந்த பிக்கு(42), அனூப் வர்கீஸ்(37) ஆகியோரையும் கைது செய்தனர்.
தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையில் இன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்வது போன்ற பணிகளை திறம்படச் செய்த காவல்துறையினருக்கு சீர்மிகு பணிகளை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கியும் மேலும் சிறப்பாக பணியாற்ற தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
தேனியில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அதில், “ஜி.எஸ்.டி விவகாரத்தில் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் கேட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் உரிய முறையில் பதில் அளித்து இருக்கலாம்; மாற்றாக அவரை அழைத்து மன்னிப்பு கோர வைத்தது, எந்த ஒரு தமிழனாலும் ஏற்றுக்கொள்ள முடியாது; இதை நான் கண்டிக்கிறேன்” என கூறினார்.
தேனி மாவட்டம், வடபுதுப்பட்டி நாடார் சரசுவதி பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு
அரசு தேர்வாணயம் மூலம் குரூப் 2, குரூப் 2 ஏ பணியிடங்களுக்கான முதல்நிலை எழுத்துத்தேர்வு நடைபெற்று வரும் தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா நேரில், பார்வையிட்டார். உடன் அரசு தேர்வாணையம் குழு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவில் தொழில் முதலீட்டு சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை வந்தடைந்தார். சென்னை வந்தடைந்த முதலமைச்சர் ஸ்டாலினை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேனி வடக்கு மாவட்ட செயலாளரும் தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தங்க தமிழ் செல்வன் நேரில் சென்று சந்தித்தார்.
தேனி மாவட்டத்தில் பெரியகுளம், ஆண்டிபட்டி, கடமலை-மயிலை, சின்னமனூர், போடி, உத்தமபாளையம், கம்பம் ஆகிய 8 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் உள்ளன. இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உதவி பொறியாளர்களாக பணியாற்றக்கூடிய 16 ஒன்றிய பொறியாளர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார்.
தேனி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பாக மாவட்ட அளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் செப்டம்பர் 21ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளதாக தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா இன்று (செப்.13) தெரிவித்துள்ளார். இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளனர்.
சின்னமனூர் அருகே உள்ள பொன்னி லாரி சர்வீஸ் டிரைவர் குப்பமுத்து புலிக்குத்தி வாடகைக்கு சென்று விட்டு திரும்பும் வழியில் உடனிருந்த நபர் பாம்பினை கண்டு குப்பமுத்துவிடம் தெரிவித்தார். உடனே அவர் அச்சப்படாமல் அந்த வாகனத்தை சுமார் 10 கிலோமீட்டர் அந்தப் பாம்புடன் பயணம் மேற்கொண்டு சின்னமனூரில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு கொண்டு வந்து தீயணைப்பு அதிகாரிகள் மூலம் அந்த பாம்பை மீட்டு ஒப்படைத்தார்.
Sorry, no posts matched your criteria.