India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் நிஃபா வைரஸ் பரவாமல் தடுப்பதை உறுதி செய்யும் வகையில் தேனி மாவட்டம் எல்லையான குமுளி குமுளி பகுதியில் சுகாதாரத்துறை சார்பாக கேரள மாநிலத்தில் இருந்து வரும் பொதுமக்கள் அனைவரையும் முழு சோதனைக்குப் பிறகு தேனி மாவட்டத்திற்குள் அனுமதி மேலும் சுகாதாரத் துறை சார்பாக 24 மணி நேரமும் நிஃபா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்ட மக்களவை உறுப்பினர் தங்க தமிழ் செல்வன் தனது முகநூல் பக்கத்தில் சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி காப்பதற்காக சமரசமின்றி இறுதி வரை போராடிய பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த சமூகநீதி நாள் இன்று என பெரியாருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். தொடர்ந்து மிலாது நபி வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் லெட்சுமிபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா நேற்று நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டார். இதனை அடுத்து அங்கன்வாடி பணியாளரிடம் குழந்தைகளின் வருகை பதிவேடு, உயரம், எடை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.
தேனி மாவட்டம், போடி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (35 வயது). சென்னையில் குடும்பத்துடன் தங்கி வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் போடி பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு திரும்ப வந்துள்ளார். அப்பொழுது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து டிவி, ஹோம் தியேட்டர், கிரைண்டர், மிக்சி ஆகியவற்றை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து போடி நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற வேளாண்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் 120 எக்டேர் தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்ற எக்டேருக்கு ரூ.9600 மானியம் வழங்கப்பட உள்ளது. விருப்பம்முள்ளோர் அருகில் உள்ள வேளாண் அலுவலகங்களை அனுகலாம். இவ்வாறு வேளாண் இணை இயக்குநர் பால்ராஜ் தெரிவித்துள்ளார்.
தேனி பின்னத்தேவன்பட்டியைச் சேர்ந்த ஜோதியம்மாள் இவரும் அதே பகுதியைச் சேர்ந்த முருகேஸ்வரியும் வெங்காயம் அறுவடைக்குச் சென்றபோது தகராறு ஏற்பட்டது. முன் விரோதத்தில் முருகேஸ்வரியின் மகன் சிவசாமி உள்ளிட்ட 6 பேரும் ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு புகுந்து ஜோதியம்மாளையும் இவரது மகள் ஜெயஸ்ரீயையும் தாக்கியுள்ளனர். இதில் ஜோதியம்மாள் பலியானர். போலீசார் காசிமாயன், சிவராஜா, பிரேம்குமார் உள்ளிட்ட 3 பேர் கைது செய்தனர்.
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறை சார்பாக திருக்குறள் முற்றோதல் போட்டியில் கூடலூர் என்.எஸ்.கே.பி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த சிவ சூர்யா மற்றும் சிவசந்துரு ஆகிய இரண்டு மாணவர்கள் 1330 குரல்களை ஒப்புவித்து தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சரிடம் தலா 15000 ரூபாய் மற்றும் பாராட்டு சான்றிதழ் பெற்று சாதனை படைத்துள்ளனர். அவர்களுக்கு மாணவர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரிய பெருமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
போடியை சோ்ந்தவர் தினேஷ். இவர் சென்னையில் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகிறார். அவ்வப்போது போடிக்கு வந்து சொந்த வீட்டில் தங்கிவிட்டு செல்வார். இந்நிலையில் நேற்று முன்தினம்(செப்.14) போடிக்கு வந்தபோது வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த எல்.இ.டி. டிவி, ஹோம் தியேட்டா், மிக்ஸி, கிரைண்டா், 2 சிலிண்டர்கள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து போடி நகர் போலீசார் வசாரிக்கின்றனர்.
தேனி மாவட்டத்தில் கடந்த நிதியாண்டில் சிறப்பாக செயல்பட்ட ஏத்தகோவில் கள்ளர் தொடக்கப் பள்ளி, கணேசபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஜி.உசிலம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி, ஏ.வாடிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய 4 அரசு பள்ளிகளுக்கு காமராஜர் விருது வழங்கப்பட்டது. இப்பள்ளிகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பரிசு வழங்கப்பட்டுள்ளது.
மேல்மங்கலம் ஒத்தவீடு காட்டுப் பகுதியில் ஆக.29 அன்று பெண்ணின் மண்டை ஓடு கண்டறியப்பட்டது. சேகரிக்கப்பட்ட அந்த மண்டை ஓடு தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டி.என்.ஏ., பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அது குறித்த பரிசோதனை முடிவு கிடைத்துள்ள நிலையில் தேவதானப்பட்டி போலீசார், மாநிலம் முழுவதும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பெண்களின் பெயர்கள் விபரம் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.