Theni

News April 7, 2024

தேனி: ஏப்ரல் 9ல் இபிஎஸ் பிரச்சாரம்

image

தேனி பங்களாமேடு பகுதியில் நாளை மறுநாள் (9.4.2024) முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வி.டி.நாராயணசாமியை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார், மாவட்ட செயலாளர்கள் முருக்கோடை ராமர், ஜக்கையன் ஆகியோர் பங்கேற்றனர்.

News April 7, 2024

தேனி அருகே சரமாரி அடி உதை

image

அம்மச்சியாபுரத்தை சேர்ந்தவர் காமாட்சியம்மாள். கடந்த 30ஆம் தேதி இவரது அண்ணன் அசோக்குமாருடன் இட பிரச்சினை காரணமாக செந்தில்குமார் என்பவருடன் சண்டை போட்டார்.  இதனை விலக்க சென்ற காமாட்சியம்மாளை செந்தில்குமாரும் அவரது மனைவி சுகன்யாவும் முடியை பிடித்து இழுத்து அடித்து உதைத்தனர். மயக்கமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

News April 7, 2024

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவர் கைது

image

கம்பம் தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கோதண்டராமன் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து சென்றபோது கம்பம் பார்க் ரோடு உழவர் சந்தை ரவுண்டானாவில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் விற்றுக் கொண்டிருப்பதை கண்டனர். போலீசார் அவரை சோதனையிட்டு அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளை கைப்பற்றி அவரை கைது செய்தனர்.

News April 7, 2024

உங்கள் தொகுதி வேட்பாளர் பற்றி தெரிந்து கொண்டு வாக்களிக்கவும்

image

உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள <>https://affidavit.eci.gov.in/<<>> என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து தெரிந்துகொள்ளலாம். அல்லது ப்ளே ஸ்டோரில் KYC என்ற செயலி மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

News April 7, 2024

உழவர் சந்தையில் தேர்தல் விழிப்புணர்வு

image

ஆண்டிபட்டி உழவர் சந்தையில் 100% வாக்களிப்பினை உறுதி செய்யும் விழிப்புணர்வு நிகழ்ச்சி தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வீ.ஷஜீவனா அறிவுறுத்தலின்படி நேற்று நடைபெற்றது. தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பிரபா ஆலோசனை படி உதவி அலுவலர் பால்பாண்டி மற்றும் விவசாயிகள்,வியாபாரிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டு தேர்தல் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News April 6, 2024

வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

image

வீரபாண்டி அருகே தனியார் மில்லில் வேலை பார்ப்பவர் சர்வேஷ் (36). இவர் வீரண் என்பவருடன் நேற்று இரவு வீரபாண்டி கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது டூவீலரில் வந்த 2 வாலிபர்கள் சர்வேஷின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு ரூ.1000 பறித்துக் கொண்டு தப்ப முயன்றனர். இதையடுத்து தகவலின் பேரில் தனசேகரன் (20), சிம்பு (20) ஆகியோரை வீரபாண்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News April 6, 2024

பெரியகுளம் அருகே மருத்துவ முகாம்

image

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வடுகப்பட்டி வள்ளலார் சத்ய ஞான சபை தர்மச்சாலையில் இன்று கலிக்கம் சித்த மருத்துவ கண் சிகிச்சை சொட்டுநீர் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் ஏராளமான முதியோர்கள் கலந்து கொண்டு, கண்ணை பரிசோதித்து மருத்துவ சொட்டுநீர் செலுத்தி பயன்பெற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வள்ளலார் சத்ய ஞான சபை நிர்வாக குழு பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

News April 6, 2024

பதற்றமான சாவடி எண்ணிக்கை வெளியீடு

image

தேனி மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 381 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 0 வாக்குச்சாவடி மிகவும் பதற்றமானது என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

News April 6, 2024

தேனியில் விறுவிறு தபால் வாக்குப்பதிவு

image

தேனி பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அஞ்சல் வாக்கினை பதிவு செய்திட படிவங்கள் பெறப்பட்டு கடந்த 25.03.2024 அன்று வாக்காளர்கள் இறுதி செய்யப்பட்டனர். அதன் அடிப்படையில் இன்று (ஏப்.6) சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்கள் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களது தபால் வாக்கினை பதிவு பெற்றனர்.

News April 6, 2024

வாகன சோதனையில் ரூ.5,53,000 பறிமுதல்

image

தேனி மாவட்டம் லோயர்கேம்ப் காவல் நிலைய சோதனை சாவடியில் இன்று (ஏப்.6) SST-4 அணியினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனை செய்ததில் அதில் ரூ.5,53,000 தக்க ஆவணங்கள் இல்லாமல் இருந்தது. அந்த பணம் கைப்பற்றப்பட்டு உத்தமபாளையம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்துள்ளார்.