Theni

News October 1, 2024

கல்வித்துறை இணை இயக்குனர் எனக்கூறி மோசடி – பெண் கைது

image

பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த சுந்தரவிக்னேஷ் என்பவர் தனது தங்கை மற்றும் தங்கையின் தோழியிடம் கனகதுர்கா என்பவர் தான் கல்வித்துறையில் இணை இயக்குனராக பணியாற்றுவதாகவும், பணம் கொடுத்தால் கல்வித்துறையில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறி 33 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக தேனி எஸ்.பியிடம் புகார் அளித்தார். புகாரின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று (செப்.30) கனகதுர்காவை கைது செய்தனர்.

News October 1, 2024

ரஜினிகாந்த்துக்காக ஓ.பி.எஸ் மகன் பிரார்த்தனை

image

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் மகனும் முன்னாள் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத். உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் பூரண குணம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாய் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துக் கொண்டார்.

News October 1, 2024

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

தேனி மாவட்டத்தில் அக்.02 அன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் தனியார் பார்களில் எவ்வித மது விற்பனையும் மேற்கொள்ளக் கூடாது என்று ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், விதிமீறல்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட மதுபானக்கடை பணியாளர்கள் மற்றும் பார் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 1, 2024

தேனி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

தேனி மாவட்டத்தில் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் செயல்படும் 712 சத்துணவு மையங்களில் 77,498 மாணவ மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளி வேலை நாட்களில் அல்லது விடுமுறை நாட்களில் அடையாளம் தெரியாத நபர்கள், சமூக விரோதிகள் மூலம் குற்ற சம்பவங்கள் நடைபெற்றால் சம்பந்தபட்ட நபர்கள் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News September 30, 2024

அசில் இன கோழி வளர்க்க விருப்பமா.?

image

நடப்பு ஆண்டில் தமிழ்நாடு அரசு புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தினை செயல்படுத்திட உள்ளது. இதில் ஒரு ஒன்றியத்திற்கு 100 பெண் பயனாளிகள் வீதம் தேனி மாவட்டத்திலுள்ள 8 ஒன்றியங்கள் மூலம் 800 பெண் பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியுள்ளவர்கள் அருகிலுள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பிக்குமாறு கலெக்டர் ஷஜீவனா இன்று (செப்.30) தெரிவித்துள்ளார்.

News September 30, 2024

வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

image

ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக அதிகப்படியான தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்ததால் நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் அணைக்கு நீர்வரத்து 1649 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் நீர்மட்டமும் படிப்படியாக உயர தொடங்கியுள்ளது.

News September 30, 2024

புதிதாக தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

image

தமிழக அரசால் முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்காக புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பன்னிரெண்டாம் வகுப்பு (+2) தேர்ச்சி பெற்றவர்கள் & பட்டம், பட்டயம், ஐடிஐ/தொழிற்கல்வி ஆகிய கல்வித் தகுதி பெற்ற முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்க விண்ணப்பித்து தொழில் முனைவோர்கள் பயன்பட்டுக் கொள்ளலாம் என்று கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News September 30, 2024

வயிற்று வலியை தாங்க முடியாம்மால் ஒருவர் தற்கொலை

image

தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே கோரையூத்துபகுதியில் பவித்ராவின் கணவர் சூர்யா இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துவந்துள்ளது. இதனால் அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது.இந்தநிலையில் இன்று அதிகாலை வயிற்று வலியை தாங்க முடியாமல் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். மயிலாடும்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 30, 2024

தேனி அருகே கரடிகள் நடமாட்டம்

image

மேற்கு தொடர்ச்சி மலைசார்ந்துள்ள கணவாய் மலைப்பகுதி, டி.சுப்புலாபுரம், திம்மரநாயக்கனூர் பகுதிகளில் சமீப காலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை ஒட்டியுள்ள டி.சுப்புலாபுரம் விலக்கில் கரடிகள் நடமாட்டம் குறித்த எச்சரிக்கை பலகையை வனத்துறை வைத்துள்ளது. வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களுக்கு தனியாக காலை,இரவு செல்ல வேண்டாம் என வனச்சரகர் அருண்குமார் தெரிவித்துள்ளார்

News September 29, 2024

துணை முதல்வரை சந்தித்த தேனி எம்.பி

image

தமிழ்நாடு அரசின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று(செப்.29) பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், தேனி வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளரும் தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தங்க தமிழ்செல்வன் நேரில் சென்று உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பணிகளை சிறப்பாக செய்திட தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

error: Content is protected !!