India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி,தமிழக கேரள எல்லையில் மங்கலதேவி கண்ணகி கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடம் ஒருமுறை சித்ரா பெளர்ணமியன்று நடைபெறும் திருவிழாவிற்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த ஆண்டு சித்ரா பெளர்ணமி ஏப்.23 இல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தேனி மாவட்டத்திற்கு ஏப்.23இல் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக மே.4 பணிநாள் எனவும் அறிவிப்பு.
தேனி, ஆண்டிபட்டியில் இந்தியாவில் பல கிராமங்களில் இன்னும் பேருந்து வசதி மின்சார வசதி கூட இல்லாத சூழ்நிலையில் தமிழக முதல்வர் கொண்டு வந்த திட்டம் தான் மக்களை தேடி மருத்துவம் திட்டம்; இத்திட்டத்தால் 1.5 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர். இது போன்ற மக்களுக்கு மகத்தான திட்டங்களை கொண்டு வரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு தங்கதமிழ்செல்வன் தெரிவித்தார்.ஸ
தேனி மக்களவை தேர்தலையொட்டி ஏப்.19ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,
காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தபால் ஓட்டு மூலம் தங்களது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றினர். மேலும் 100% வாக்களிப்பது அவசியம் குறித்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தி வருகின்றனர்.
கம்பம் பகுதியை சோ்ந்தவா் பிரபாகரன் ( 52). இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இவா் கடந்த 12 ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்ற போது எதிரே வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நோ் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரபாகரன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (ஏப்.15) அவர் உயிரிழந்தாா். இதுகுறித்து கம்பம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் திமுக சார்பில் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் நாடாளுமன்ற உறுப்பினராக அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என திமுக மேற்கு ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் அன்புச்செல்வன் மற்றும் திமுக நிர்வாகிகள் முத்து விஜயன், சதீஷ்குமார், மணி கருப்பையா ஆகியோர் சபரிமலையில் சிறப்பு தரிசனம் செய்தனர்.
தேனி மாவட்டத்தில் மொத்தம் 16.20 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 7.95 லட்சம், பெண்கள் 8.24 லட்சம், இதர 218 பேர் உள்ளனர். இந்நிலையில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வினியோகிக்கும் பணி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏப்.1ல் தொடங்கபட்டது. நேற்று முன்தினம் (ஏப்.13) வரை 13.84 லட்சம் வாக்காளர்களில், 85 சதவீத வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியர் ஷஜூவனா தெரிவித்துள்ளார்.
கெங்குவார்பட்டியைச் சேர்ந்தவர் முகிலன். இவர் B.Com படித்து வருகிறார். கடந்த 12ம் தேதி நடைபெற்ற முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் ஒரு தரப்பினர் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை கண்டு பயந்து ஓட முயன்றார். அப்போது அவரை பிடித்து அடித்து உதைத்தனர். முகம், பின்னந்தலையில் இரத்த காயம் ஏற்பட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பல்லவராயன்பட்டியை சேர்ந்தவர் சரவணன். இவர் நேற்று தனது டூவீலரில் செட்டிகுளம் கண்மாய் அருகே சென்ற போது எதிரே வந்த வேன் மோதியதில் தலையில் பலத்த காயங்களுடன் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து கோம்பை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போடி பகுதியை சேர்ந்தவர் ரவிசங்கா். இவரது மனைவி முத்துமாரி. ரவிசங்கருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் முத்துமாரி அதனை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ரவிசங்கா் நேற்று முன் தினம் (ஏப்.13) விஷம் குடித்த நிலையில் அவரை மீட்டு தேனி க.விலக்கு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சைப்பலனின்றி நேற்று (ஏப்.14) உயிரிழந்தாா். இதுகுறித்து போடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோட்டூரை சேர்ந்தவர் மாயன் பெருமாள் (71). இவர் நேற்று சீலையம்பட்டி மெயின் ரோட்டில் இடது ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவக் கல்லூரிக்கு அவரை சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து சின்னமனூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.