Thanjavur

News April 4, 2024

24 மணி நேரத்தில் தீர்க்க உத்தரவு

image

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகளை தடுக்க, இன்று பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portal-ல் பதிவேற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

News April 4, 2024

தஞ்சை: 214 நுண்பாா்வையாளா்கள் நியமனம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நுண்பாா்வையாளா்களுக்கான முதல் கட்டப் பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம் நேற்று(ஏப்.3) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான தீபக் ஜேக்கப் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 8 சட்டப்பேரவை தொகுதிகளில், 114 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் வாக்குப்பதிவை கண்காணிக்க 214 நுண்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

News April 4, 2024

தஞ்சாவூா்: தேர்தல் செலவின ஒத்திசைவுக் கூட்டம்

image

தஞ்சாவூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் மாா்ச் 30ம் தேதி வரையிலான தேர்தல் செலவின கணக்கு விவரங்களை ஏப்.1ம் தேதி தாக்கல் செய்தனர். இதற்கான 2ம் கட்ட செலவின ஒத்திசைவுக் கூட்டம் ஏப்.10ம் தேதியும், 3ம் கட்ட ஒத்திசைவுக் கூட்டம் ஏப்.17ம் தேதியும் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா்.

News April 3, 2024

ஒரத்தநாடு: ரூ.2.35 லட்சம் பறிமுதல்

image

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள ஒக்கநாடு கீழையூர் பகுதியில் கீதாஞ்சலி தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மன்னார்குடியில் இருந்து ஒரத்தநாடு வந்து கொண்டு இருந்த அந்த வாகனத்தில் உரிய ஆவணம் இன்றி ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரிய வந்தது. அதை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஒரத்தநாடு தாசில்தார் சுந்தர செல்வியிடம் ஒப்படைத்தனர்.

News April 3, 2024

வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு 

image

குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் செயல்படும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தீபக் ஜேக்கப், தேர்தல் பொது பார்வையாளர் Y கிகேட்டோ சேம ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ் கோட்டாட்சியர் இலக்கியா மற்றும் பலர் உள்ளனர். 

News April 3, 2024

பாபநாசம்: வேட்பாளரிடம் நன்றி தெரிவித்த முதியவர்

image

பாபநாசம் தாலுகா கபிஸ்தலம் அருகே தென்செருக்கை பகுதியில், மயிலாடுதுறை பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் இன்று(ஏப்.3) வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது துரைசாமி என்பவர் ஸ்டாலின் வாகனத்தை தடுத்து நிறுத்தி, கடந்த ஆண்டு ராமதாஸின் 85வது பிறந்த நாளை முன்னிட்டு சீர்வரிசை பொருட்களுடன் 90 ஜோடிகளுக்கு பிரமாண்ட திருமணம் செய்து வைத்ததில், தனது மகளும் பயனடைந்தார் எனக்கூறி வேட்பாளரிடம் நன்றி கூறினார்.

News April 3, 2024

தஞ்சாவூர்: அழைப்பிதழ் வழங்கி விழிப்புணர்வு

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்.19ம் தேதி நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து, தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாபநாசத்தில், திருமண அழைப்பிதழ் போன்று பத்திரிகை அச்சடித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துகிருஷ்ணன், தாசில்தார் மணிகண்டன் ஆகியோர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்து வருகின்றனர்.

News April 3, 2024

பட்டுக்கோட்டை: 100 சதவீதம் வாக்குப்பதிவுக்கு விழிப்புணர்வு

image

மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு கோலப்போட்டி பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று(ஏப்.3) நடந்தது. நிகழ்ச்சிக்கு பட்டுக்கோட்டை சட்டமன்ற உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ தலைமை தாங்கினார். வட்டாட்சியர் சுகுமார் முன்னிலை வகித்தார். 40க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோலம் வரைந்தனர்.

News April 2, 2024

மூலை அனுமாருக்கு பங்குனி மூல நட்சத்திர சிறப்பு அலங்காரம்

image

தஞ்சாவூர் மேலவீதியில் புகழ்பெற்ற மூலை அனுமார் கோவில் அமைந்துள்ளது. இங்கு நேற்று 1ம்தேதி திங்கட்கிழமை இரவு பங்குனி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு மூலை அனுமாருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோயில் உட்பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. பக்தர்கள் பிரதி மூல நட்சத்திரம் மற்றும் அமாவாசை மூலை அனுமாரை தரிசனம் செய்தனர்.

News April 2, 2024

போக்குவரத்துக்கு இடையூறு: 20 வாகனங்களுக்கு அபராதம்

image

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரில் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் விஜய், லூா்து பிரவீன் உள்ளிட்டோா் நேற்று(ஏப்.1) ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, தஞ்சாவூா் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட 20 இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், சாலையோர நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளின் பொருள்களும் அப்புறப்படுத்தப்பட்டன.