India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
I.N.D.I.A. கூட்டணியின் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் ஆர்.சுதாவை ஆதரித்து, நேற்று மாலை (ஏப்ரல்.10) கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.செல்வ பெருந்தகை பிரச்சாரம் மேற்கொண்டார்கள். இந்நிகழ்வில், சு.கல்யாணசுந்தரம் எம்.பி, செ.ராமலிங்கம் எம்.பி மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் பாதிவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த வாரத்தில் சென்னையில் இயல்பான (அ) அதற்குக் கீழான வெப்ப நிலையே பதிவாகும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் பதிவான இடத்தில் 37, 39 டிகிரி செல்சியஸாக குறையக்கூடும் என தெரிவித்துள்ளார்.
தஞ்சை தொகுதி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்டு சரிபார்க்கும் பணி நடைபெறுவதை நேற்று தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும். இதன் காரணமாக நாளை 11.04.2024 தென் தமிழகம், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட எல்லையிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள காஞ்சிவாய் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததாக கூறப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்ட எல்லையான எஸ். புதூரிலிருந்து காஞ்சிவாய் வரையிலான பகுதியில் 25 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சிறுத்தை குறித்து அச்சுறுத்தும் வகையில் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஒரத்தநாடு அருகேயுள்ள திருவோணம் அண்ணா சிலை பகுதி வீட்டில் தனியாக வசித்து வருபவர் செல்லத்துரை மனைவி ராசாத்தி (70). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது திடீரென காஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டமானது. இதில் படுகாயமடைந்த ராசாத்தியை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தஞ்சை தாலுகா காவல் நிலையத்திற்கு நேற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் புகார் அளித்தார். அதில் தஞ்சையை அடுத்த திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் குரு பரிகார தல மாக விளங்குகிறது. இக்கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிதியை தவறான வழியில் செலவு செய்த கோவில் செயல் அலுவலர் அதை கண்காணிக்க தவறிய இணை ஆணையர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தஞ்சை நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் சிவனேசனை ஆதரித்து தஞ்சை கீழவாசல் காமராஜர் சிலை அருகே தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று இரவு பிரசாரம் செய்தார். அப்போது தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடைபெறுகிறது. திமுக ஆட்சியில் தமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டது. பஸ் கட்டணம், பால் கட்டணம், பெட்ரோல், டீசல், தங்கம். அரிசி விலை உயர்ந்துள்ளது என்றார்.
கும்பகோணம் அடுத்த ஆடுதுறை- ஆவணியாபுரம் ரோட்டில் உள்ள ரயில்வே கேட் மற்றும் தரங்கம்பாடி செல்லும் ரோட்டில் உள்ள ரயில்வே கேட் பராமரிப்பு பணிகள் நாளை (ஏப்ரல்10) காலை 8: 30 மணி முதல் மாலை 6: 00 மணி வரை நடைபெற இருப்பதால் ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும். ஆகவே, ஆடுதுறையிலிருந்து ஆவணியாபுரம் மற்றும் தரங்கம்பாடி செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப் பாதையில் செல்லவும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
மயிலாடுதுறையில் நடமாடும் சிறுத்தையைக் கண்டுபிடிக்க தஞ்சாவூர் மாவட்ட எல்லையான செ.புதூரில் இருந்து காஞ்சிவாய் வரை 25 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன. மேலும், ஆடு, கோழி, பன்றிகளை உள்ளே அடைத்து 5 கூண்டுகளையும் ஆங்காங்கே வைத்துள்ளோம் என கும்பகோணம் வனச் சரக அலுவலர் தெரிவித்துள்ளார். சிறுத்தை தொடர்பான வதந்திகளையோ செய்திகளையோ பரப்ப வேண்டாம் என்று அவர் கூறினார்.
Sorry, no posts matched your criteria.