India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருக்காட்டுப்பள்ளி பழநியாண்டவர் வழிபாட்டுச் சங்கத்தின் மூலமாக கடந்த இரு மாதங்களாக கோயில் வளாகத்தில் திருப்புகழ் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முருக பக்தர்கள் திருப்புகழை பயில ஏதுவாக 150 திருப்புகழ் பாடல்களை தொகுத்து ” இருப்பவல் திருப்புகழ்”என்ற நூலை தயாரித்து பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கும் முருக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
தஞ்சை பெரியகோவிலில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு வருகிற 20-ந் தேதி (சனிக்கிழமை) ஒரு நாள் மட்டும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவல கங்களுக்கும் , கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோயில் சித்திரை தேர்த்திருவிழாவையொட்டி ஏப்ரல் 20ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோவில் புகழ்பெற்ற கோவிலாகும் இக்கோவிலில் பக்தர்கள் நாள்தோறும் அதிகளவில் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சித்திரை திருவிழா தேரோட்டம் வருகிற 20-ந் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு பெரிய கோவில் தேரை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். புகழ்பெற்ற இந்த தேர் திருவிழாவை எண்ணி பக்தர்கள் காத்துக்கிட்டு இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.
மீன்கள் இனப்பெருக்கத்துக்கா ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14- ந்தேதி நள்ளிரவு வரை 61 நாட்கள் மீன்பிடிக்க தடைகாலம் நடைமுறைபடுத்தி வரப்படுகிறது. அதன்படி தடைக்காலம் தொடங்கியுள்ளதால், தஞ்சை மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள 146 விசைப்படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
சித்திரை முதல் நாளையொட்டி, தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே நடுக்காவேரி கிராமத்திலுள்ள வயல்களில் நல்லோ் பூட்டும் விழா நேற்று நடைபெற்றது. இதில் விவசாயிகள் தங்கள் வீடுகளில் விதை நெல், வெற்றிலை, பாக்கு, பழங்கள் வைத்து பூஜைகள் செய்து, பின்னா் தங்களது உழவு மாடுகளுடன் வயல்களுக்கு சென்று நல்லோ் பூட்டி உழவு பணியைத் தொடங்கினா்.
தஞ்சை கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தஞ்சை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுபான கூடங்கள், வருகிற 17-ந் தேதி காலை 10 மணி முதல் 19-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரையும், ஜூன் 4-ந் தேதியும், 21-ந் தேதி மே தினமான 1-ந் தேதி ஆகிய நாட்களில் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
பேராவூரணி நகரில் அமைந்துள்ள தீராத வினை தீர்க்கும் ஏந்தல் ஸ்ரீ நீலகண்ட பிள்ளையார் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று கோவிலில் உள்ள கொடி மரத்தில் காப்பு கட்டப்பட்டது. 12 நாள் திருவிழாவான இன்று முதல் நாள் திருவிழா மிகச் சிறப்பாக கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. சாமி ஊர்வலம் நடைபெற்றது.
தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. இதனையடுத்த தஞ்சை குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வாக்கு என்னும் மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
நடுக்காவேரி யூனியன் வங்கி அருகில் பறக்கும் படை அதிகாரி பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கண்டியூர் நோக்கி வந்த டாட்டா லாரி வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது வாகனத்தை ஓட்டி வந்த நாமக்கல் பரமத்திவேலூர் தாலுகா புதுப்பாளையம், வள்ளியம்பட்டி தனராசு ஆவணங்களுமின்றி ரூ.80,000 எடுத்து வந்தார். அதை பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
Sorry, no posts matched your criteria.