India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகாவில் அமைந்துள்ளது சாரங்கபாணி திருக்கோயில். இக்கோயிலில் இன்று(ஏப்.23) தேர் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், தேரின் சக்கரம் சாலையில் உள்வாங்கியுள்ளது. கோயிலின் 4 வீதிகள் வழியாக வலம் வந்து கொண்டிருந்தபோது, 10 அடி பள்ளத்தில் சிக்கியது. 5 ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் தேரை மேலே தூக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் அருகே ஒருவர் கொலை வெறி தாக்குதல் நடத்த உள்ளதாக திருப்பனந்தாள் காவல் ஆய்வாளர் சத்யாவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட வாகன சோதனையில், இருசக்கர வாகனத்தில் வந்த கூலிப்படையை சேர்ந்த 3 பேரை நேற்று(ஏப்.22) போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் புகழ்பெற்ற சாரங்கபாணி கோயில் சித்திரை பிரம்மோற்சவ விழா ஏப்ரல் 14ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தினசரி காலை பல்லக்கிலும் மாலை பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்று வந்த நிலையில், முக்கிய விழாவான தேரோட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாரங்கா, சாரங்கா என முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ளது அருந்தவபுரம். இந்த ஊரின் குளக்கரை அருகே இருந்த பெரிய அரச மரத்தின் வேர் பகுதியில் சிவலிங்கம் இருப்பதாக அரன்பணி அறக்கட்டளையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது 3.75 அடி உயரத்திலான ஆவுடையுடன் சிவலிங்கம் இருந்தது. இந்த சிவலிங்கம் பிரம்ம பாகம், விஷ்ணு பாகம், ருத்ர பாகம் கொண்ட சோழர் காலத்தை சேர்ந்த சிவலிங்கம் என கூறப்படுகிறது.
பேராவூரணி பகுதியில் உள்ள நீலகண்ட பிள்ளையார் கோயிலில் சித்திரைத் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று(ஏப்.22) நடந்தது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன், முருகன் தேரில் எழுந்தருளினார். பின்னர் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அசோக்குமார் எம்.எல்.ஏ., பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தஞ்சாவூர் காவேரி சிறப்பங்காடி அருகில் இடதுசாரிகள் பொது மேடை சார்பில்
உலக பாட்டாளி வர்க்கத்தின் தலைவர் லெனின் 154 வது பிறந்தநாளில் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பாலஸ்தீனத்தின் காசா ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து இஸ்ரேல் வெளியேற்றப்பட வேண்டும். பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்து, அறிவிக்க வேண்டும். உக்ரைன், ரஷ்யா போர் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
தென் இந்தியப்ப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடுகிறது. இதன் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். நேற்று(ஏப்.21) மதியம் இவருக்கு சொந்தமான 4 ஆடுகள் வயிறு வீங்கி, மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதேபோல கடந்த 2 நாட்களுக்கு முன்பு 4 ஆடுகள் மர்மமான முறையில் இறந்துள்ளது. இது குறித்து பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார், ஆடுகள் இறந்த இடத்திற்குச் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 24 ஆயிரத்து 200 பேரும், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 90 ஆயிரத்து 301 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 129 பேர் என மொத்தம் 15 லட்சத்து 14 ஆயிரத்து 630 வாக்காளர்கள் உள்ளனர். இதில் நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் 10 லட்சத்து 24 ஆயிரத்து 949 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. இதில் ஆண்களை விட பெண்களே அதிகளவில் வாக்கு அளித்துள்ளனர்.
திருவையாறில் பிரசித்தி பெற்ற ஐயாறப்பர் கோவிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (ஏப்,22, திங்கட்கிழமை) நடக்கிறது. ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் தேரில் அமர்ந்து பஞ்ச மூர்த்திகளுடன் திருவையாறின் 4 வீதிகளிலும் தேர் வீதி உலா வருகிறது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள் .
Sorry, no posts matched your criteria.