India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோடை விடுமுறை முடிந்து ஜீன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்குவதற்காக தஞ்சை நாஞ்சிக்கோட்டை அருகே அண்ணாநகர் பகுதியில் உள்ள மாவட்ட துணி வெட்டும் மையத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இன்று (மே.22) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் ராஜம் (55). இவருடைய மகள்கள் பத்மப்பிரியா (36), சத்தியப்பிரியா(33) மற்றும் சத்தியப்பிரியாவின் கணவர் சுரேஷ் (37) ஆகியோர் காரில் தஞ்சை- விக்கிரவாண்டி புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கும்பகோணம் நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது. இரண்டு கார்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் ராஜம் சம்பவயிடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (மே.20) மழைப்பொழிவான அளவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கல்லணை பகுதியில் 14 செ.மீட்டரும், தஞ்சை பாபநாசம் பகுதியில் 5 செ.மீட்டரும், எச்சன்விடுதி பகுதியில் 3 செ.மீட்டரும், பட்டுக்கோட்டை, அதிராமப்பட்டினம், வெட்டிக்காடு ஆகிய பகுதிகளில் 1 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.
தஞ்சை பெரிய கோவிலுக்கு நேற்று (மே,20) சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அப்போது லேசான தூறலுடன் சாரல் மழை பெய்தது. இதனால் முன்னெச்சரிக்கையாக மழையில் நனையாமல் இருப்பதற்கு குடையும் கொண்டு வந்தனர். பின்னர் வரிசை நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியில் வரும் பொழுது உறவினர்களுடன் ஒருவர் ஒருவர் மழையில் நனையாமல் இருப்பதற்காக ஒற்றுமையுடன் கொடையை பிடித்தவாறு தஞ்சை பெரிய கோவிலை சுற்றி பார்த்துச் சென்றனர்.
புகழ்பெற்ற நடிகர் ஆர்.முத்துராமன், நடிகர் கார்த்திக் ஆகியோரின் பூர்வீகம் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு மேலையூர் ஆகும். நடிகர் கார்த்திக் மகன் கவுதம் கார்த்திக் நேற்று ஒக்கநாடு மேலையூருக்கு வந்தார். அவருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து நடிகர் கவுதம் கார்த்திக் அங்குள்ள அவர்களது குலதெய்வ கோவிலான மெய் சொல்லும் பெருமாள் பட்டவன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை மழைப்பொழிவு விவரம்: பாபநாசத்தில் 47 மில்லி மீட்டரும், கும்பகோணத்தில் 6 மில்லி மீட்டரும், வல்லத்தில் 7 மி.மீட்டரும், ஈச்சன்விடுதியில் 29 மி.மீட்டரும், குருங்குளத்தில் 54 மி.மீட்டரும், பட்டுக்கோட்டையில் 10 மி.மீட்டரும், அயன்குடி பகுதியில் 54.4 மி.மீட்டரும் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் திட்டங்களில் ஒன்றான புதுமைப் பெண் திட்டத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து முடித்துவிட்டு தற்போது மேற்படிப்பில் சேர்ந்துள்ள மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் மாதம் ஆயிரம் ரூபாய் தமிழக அரசு வழங்கி வருகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 2.73 லட்சம் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதே போல் தஞ்சாவூர் மாவட்டத்தில் 9,050 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.
திருவோணம் பகுதியில் தொடர்ந்து பலத்த மழை காரணமாக ஏராளமான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், எள், உளுந்து பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நெற்பயிர்கள் கதிர் வந்த நிலையில் சாய்ந்து தரையில் படுத்து, மழைநீரில் மூழ்கி உள்ளன. அதே போன்று எள் பயிர்களும் மழையினால் அழுகி சேதம் அடைந்துள்ளது. ஏற்கனவே வறட்சி நிலவி வந்த நிலையில், விவசாயிகள் கடன் வாங்கி சாகுபடி செய்த நிலையில், இத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை (மே.21) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சாவூரில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பதிவாகக் கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
Sorry, no posts matched your criteria.