India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர் அரண்மனை கிபி 1550இல் மராத்தியர் மற்றும் நாயக்கர்களால் கட்டப்பட்டது. இது பெரியக்கோட்டை மற்றும் சின்னக்கோட்டை என்று பிரிக்கப்பட்டுள்ளது. அரண்மனை பெரியக்கோட்டை வளாகத்தில் அமைந்துள்ளது. இந்தக்கோட்டை 110 ஏக்கர் பரப்பளவில் தஞ்சை நாயக்கர்களின் கடைசி மன்னரான விஜயராகவ நாயக்கரால் கட்டப்பட்டது. இந்த அரண்மனை, ஒரு நூலகம், அருங்காட்சியகம் மற்றும் கலைக்கூடம் ஆகியவற்றின் இருப்பிடமாக திகழ்கிறது.
நேதாஜி மருதையார் கல்வி அறக்கட்டளை நிறுவனம் நடத்திய 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களை பாராட்டுதல் மற்றும் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலை பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது.
தஞ்சாவூரில் உள்ள மனோரா கோட்டை, 1814இல் கடல் போரில் நெப்போலியனுடன் போரிட்டு ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றதைப் பாராட்டும் வகையில் தஞ்சையை ஆண்ட தஞ்சாவூர் மராத்திய மன்னர் இரண்டாம் சரபோஜி கட்டினார். இந்த மனோரா நினைவு சின்னம் எட்டு மாடி அறுகோணவடிவ கோபுர அமைப்புடையது. 2004இல் ஏற்பட்ட சுனாமியில் கோட்டை உட்பட ஐந்து நினைவுச் சின்னங்கள் சேதமடைந்தன. 2007 ல் இது, தமிழ்நாடு சுற்றுலாத்துறையினரால் புனரமைக்கப்பட்டது.
கும்பகோணம் தேப்பெருமாநல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் கட்டட வேலையில் திருநாகேஸ்வரத்தை சேர்ந்த வெங்கடேசன்(30) என்பவர் வேலை செய்யும் போது தடுமாறி அருகில் சென்ற மின்கம்பி மீது விழுந்துள்ளார். இதில் அவர் மீது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நிச்சயதார்த்தம் நடந்து திருமணத்திற்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் வெங்கடேஷன் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சித்தலைவர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “மாணாக்கர்களின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு, அதனை ஊக்குவிக்கும் வகையில் நான் முதல்வன் திட்டம் தமிழக அரசால் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 28 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திறன் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் 1,00,443 மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர் டேவிட், சச்சிதானந்தம் மற்றும் காவலர்கள் அருண்குமார், சுரேந்திரன், சிம்ரான், முத்துக்குமார் ஆகியோர்கள் கொண்ட தனிப்படையினர் 25 கிலோ கஞ்சா கடத்திய நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்த தனிப்படை காவலர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் பரிசுத்தொகை வழங்கி வெகுவாக பாராட்டினார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு பண்டங்களை லாபநோக்கில் விற்பனை செய்வதற்காக கடத்தப்பட்ட வழக்கில் 34 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வாகனங்களை யாரும் உரிமை கோராததால் ஏலம் விடப்பட உள்ளது. மேற்படி உள்ள வாகனங்கள் தங்களுடையது என்று கருதினால் அசல் ஆவணங்களுடன் 15 நாட்களுக்குள் மாவட்ட வருவாய் அலுவலகத்தை அனுக அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை: சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், தமிழக முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று வழங்கப்படுகிறது. இதற்கு 1லட்சம் ரொக்கமும் சான்றிதழ்களும் வழங்கப்படும். இந்தாண்டு அவ்விருதிணை பெற தகுதியுடைய இளைஞர்கள் www.sdar.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார்.
ஒரத்தநாடு அருகே உள்ள பேய்கரும்பன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவர்களுடைய மகள் தீக்சிகா (4). நேற்று முன்தினம் சாப்பிடுவதற்கு கை கழுவ கழிவறைக்கு சென்றார். அங்கு தண்ணீர் நிரப்பப்பட்டிருந்த பெரிய பாத்திரத்தில் கை கழுவுவதற்காக கீழே குனிந்த போது எதிர்பாராதவிதமாக அவள் நிலை தடுமாறி குவளையில் தலை குப்புற விழுந்ததில், பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதற்காக அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கான தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. வார்டுகளுக்கு வெளியே கபசுரக் குடிநீர், ஓ.ஆர்.எஸ் கரைசல், மருந்து, மாத்திரைகள் போன்றவைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.