India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் ஆகிய 2 தாலுகாக்களிலும் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் இன்று பிற்பகல், காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என சொல்லப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்
பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் 8 மாத கர்ப்பத்துடன் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி மாணவியை கர்ப்பம் ஆக்கிய இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நவ.29 (வெள்ளிக்கிழமை) தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் தொடர் மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குறைதீர்க்க கூட்டம் நடைபெறும் மறுஅறிவிப்பு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை (நவ.29) மற்றும் நாளை மறுநாள் (நவ.30) தஞ்சை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமெண்டில் பதிவிடவும்..
திருவிடைமருதூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைப்பயிற்சி சென்ற மணிமேகலை(62) என்ற மூதாட்டியை மர்ம நபர்கள் தாக்கி நகைகளை பறித்து சென்றனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அகமதுயாசின் (20) மற்றும் ஏசுகவிபாலன் (21) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 7 சவரன் தங்கநகை மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
மாவட்ட எஸ்.பி ஆசிஷ் ராவத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், சில இடங்களில் தண்ணீர் வீடுகளில் தேங்கி உள்ளது என்றும், அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று சிலர் தவறான தகவல்களை சமூகவலைதளத்தில் பரப்பி வருகின்றனர். இதுபோன்று தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் இராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு வயிற்று வலி காரணமாக 9 ஆம் வகுப்பு மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. விசாரணையில் அதே பகுதியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை காதலிப்பதாகவும், குழந்தைக்கு அவர்தான் தந்தை எனவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து 10 ஆம் வகுப்பு மாணவனான போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
ஒரத்தநாட்டில் அதிகபட்சமாக நேற்று 24.50 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும், பேராவூரணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 20 மி.மீ, தஞ்சையில் 16.5 மி.மீ, வல்லம் பகுதியில் 8 மி.மீ, குருங்குளத்தில் 15.80 மி.மீ, திருவையாறில் 10 மி.மீ, பூதலூரில் 12.40 மி.மீ, திருக்காட்டுபள்ளியில் 7.60 மி.மீ, கல்லணையில் 10 மி.மீ, கும்பகோணத்தில் 5.80 மி.மீ, பாநாசத்தில் 10.00 மி.மீ மழை பதிவாகி உள்ளது.
கனமழை காரணமாக தஞ்சாவூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாற வாய்ப்புள்ளது.இதனால் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மாணவர்கள் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்க
தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக புதன்கிழமை (27.11.2024) பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுட்டுள்ளார். ஏற்கனவே நாகை, மயிலாடுதுறை, உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.