India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தியில், மாவட்ட வேலை வாய்ப்பு (ம) தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 20ஆம் தேதி காலை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதில் தஞ்சையில் உள்ள முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 100க்கும் அதிகமான காலி பணியிடங்களை தகுதியான நபர்களை கொண்டு தேர்வு செய்ய உள்ளனர். இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
தஞ்சை வெண்ணாறு வடகரை சாலையில் நவ.8ஆம் தேதி நின்ற காரின் இருக்கையின் அடியில் 136.6 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக ரவிச்சந்திரன், சுப்பிரமணியன், டேவிட் பெர்னாண்டோ, அய்யப்பன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் மாவட்ட எஸ்.பி. பரிந்துரை பேரில் 4 போரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார். நேற்று 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தஞ்சை அர்பன், ஆவணியாபுரம், சாக்கோட்டை, தஞ்சை நகர் பகுதி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (டிச. 17) மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளன. இதனால் கீழவாசல், திலகா்திடல், கரம்பை, சாலைக்காரத் தெரு, ராவுத்தாபாளையம், பழைய பேருந்து நிலையம், பழைய மாரியம்மன் கோவில், மேல வீதி, தெற்கு வீதி, பெரியகோயில் சாலை உள்ளிட்ட பிற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண்மைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகத் துறை அதிகாரிகள், வல்லுநர்கள், தொழில்நுட்ப ஆலோசகர்கள் அடங்கிய குழுவினர் கிராமங்கள் தோறும் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி வழங்க உள்ளனர். இந்த பயிற்சியானது டிசம்பர் 24 முதல் நடைபெற உள்ளது என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலநேந்திரம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தஞ்சை நீதிமன்ற சாலையில் உள்ள நகர துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மேம்பாலம், மேல வீதி, தெற்கு வீதி, பெரிய கோவில், செக்கடி, மகர்நோன்பு சாவடி, வண்டிக்கார தெரு, தொல்காப்பியர் சதுக்கம், ஆடக்காரத்தெரு, கீழவாசல் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
தஞ்சை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 2,430 வழக்குகளில் ரூ.11.68 கோடி அளவுக்கு தீா்வு காணப்பட்டது. தஞ்சை மாவட்டத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசமாகப் பேசி தீா்வு காண்பதற்காகத் தேசிய அளவிலான சிறப்பு மக்கள் நீதிமன்றம், மாவட்ட முதன்மை நீதிபதி கே. பூரண ஜெய ஆனந்த் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் 2,430 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
சேதுபாவாசத்திரம் பகுதியை சேர்ந்த வினோத் – மோனிஷா தம்பதி. இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும், தர்னீஸ் என்ற ஒன்றரை வயது நிரம்பிய ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் தர்னீஸ் இன்று வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த போது, வீட்டின் முன்பு இருந்த வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்து அங்கு தேங்கி இருந்த மழைநீரில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை அரண்மனையை அடுத்துள்ள தாஸ்தமால் சந்து பகுதியில் செங்கற்களால் கட்டப்பட்ட பழமைவாய்ந்த பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் பயன்பாட்டில் இல்லாமல் இருந்ததால் பராமரிப்பும் செய்யப்படவில்லை. இதனால் கோவில் முழுவதும் செடி, கொடிகள் வளர்ந்து காணப்பட்டது. நேற்று தொடர் மழையின் காரணமாக செங்கற்களால் ஆன இந்த கோவில் இடிந்து சரிந்தது.
பூதலூர் அருகே வெண்டையம்பட்டியை சேர்ந்தவர் ஜெயபால் (49). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சிவா (35) என்பவருக்கும் சொத்து குறித்து முன் விரோதம் உள்ளது. சிவா, அவரது சகோதரர் சிவகுமார், தந்தை ராஜேந்திரன் ஆகியோர் ஜெயபால் வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறு செய்து ஜெயபாலை கட்டையால் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்து தஞ்சை டிஎம்சி யில் சேர்க்கப்பட்டார். பூதலூர் போலீசார் வழக்குப்பதிந்து சிவாவை கைது செய்தனர்.
கனமழை எச்சரிக்கை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.13) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.