India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், பேராவூரணி, ஒரத்தநாடு, அம்மாபேட்டை, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட பள்ளி கட்டடங்களை மாணவர்களின் பயன்பாட்டிற்காக நாளை 23 ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. பகல் வேலைகளில் வெயில் வாட்டி வந்த போதும், இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 37 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளன.
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள திருச்செனம் பூண்டி மெயின் ரோட்டை சேர்ந்தவர் சீனிவாசன் (48). விவசாயியான இவர் நேற்று மாலை திருக்காட்டுப்பள்ளிக்கு மளிகை பொருட்கள் வாங்க சென்ற போது புதிய காவிரி ஆற்று பாலம் அருகே பின்னால் வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் சீனிவாசன் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தஞ்சை மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம் தலைமையில் தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் கடைகளில் சோதனையின் போது ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த 15 கடைகளுக்கும், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 15 கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக கடைகளின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
முடச்சிக்காடு பகுதியில் கடந்த 22 ஆம் தேதி 330 கிலோ கஞ்சாவை கடல் மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற பிரமுராஜ் (34), அண்ணாதுரை(44), முத்தையா(60) ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்ய, அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவு.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தலின் பேரில், தஞ்சையில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று புதிய பஸ் நிலையம் மற்றும் அதன் அருகிலுள்ள 50-க்கும் மேற்பட்ட கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்த 30 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் மொத்தமாக ரூ.10,000 அபராதம் விதித்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மத்திய மண்டல காவல் துறை தலைவர் கார்த்திகேயன் தஞ்சை சரகத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் அலுவலர்கள் மற்றும் ஆளிநர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் ஜியாவுல் ஹக் மற்றும் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் உடனிருந்தனர். அதனைத் தொடர்ந்து சிறப்பாக பணிபுரிய அறிவுரை (ம) ஆலோசனைகளை வழங்கினார்
ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை,தெலுங்கன்குடிக்காடு, துவரங்குறிச்சி திருமலை, விஷ்ணம்பேட்டை திருக்காட்டுப்பள்ளி, உள்ளிட்ட பிற துணை மின்நிலையங்களில் நாளை (டிச.21) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு துணை மின்நிலையங்களில் நாளை (டிச.21) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் பட்டுக்கோட்டை, கும்பகோணம், திருக்காட்டுப்பள்ளி, துவரங்குறிச்சி, செங்கிப்பட்டி, திருப்புறம்பியம், திருப்பனந்தாள், ஒரத்தநாடு, மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போதே செய்தியை ஷேர் செய்யவும்!
கல்லணை அருகே கோவிலடி புதிய பம்ப் ஹவுஸ் அருகில் கொள்ளிடம் ஆற்றில் மூதாட்டி ஒருவர் இறந்த நிலையில் கரை ஒதுங்கி இருந்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தோகூர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கடலூர் மாவட்டம் வேப்பூர் தெற்கு தெருவை சேர்ந்த அருணாச்சலம் மனைவி நளினி (73) என்பது விசாரணையில் தெரியவந்தது. பின்னர், அவரதுஉறவினர் தனலட்சுமிக்கு தெரியப்படுத்தி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.