India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சை மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த 45 கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.9,500 அபராதம் விதிக்கப்பட்டது. பல்வேறு கடைகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 4 டன் பிளாஸ்டிக் பொருட்கள் அழிக்கப்பட்டன. பிளாஸ்டிக், புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள்ளவதால், விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் தமிழகம் முழுவதும் ரூ.99.68 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 400 வகுப்பு கட்டடங்களை காணொளி காட்சி மூலம் முதல்வர் நேற்று திறந்து வைத்தார். இதே போல் தஞ்சை மாவட்டத்தில் 21 பள்ளிகளில் ரூ.7.48 கோடி மதிப்பில் 45 புதிய வகுப்பறை கட்டடங்கள் மாணவர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.
டெல்டா மாவட்டங்களில் சம்பா – தாளடி சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக தூத்துக்குடி மற்றும் கர்நாடக மாநிலத்திலிருந்து 2,650 டன் யூரியா, பொட்டாஸ் காம்ப்ளக்ஸ், டிஏபி உரம் தஞ்சைக்கு வந்தடைந்தது. இந்த உரமூட்டைகள் லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
வாட்டாத்திக்கோட்டை காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணி ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த நபர், காவல்துறையை பார்த்ததும் கையில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை கீழே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதனிடத்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றனர். வேட்டையாட துப்பாக்கி எடுத்து வரப்பட்டதா என விசாரணை நடத்தினர்.
அதிராம்பட்டினம் நகராட்சி பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் இணைந்து நடத்தும், ஆதார் சிறப்பு முகாம், பெயர் மாற்றம், முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம் நாளை முதல் டிச.31ஆம் தேதி வரை ஸ்ரீ துர்க்கா செல்லியம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வளையப்பேட்டை ஊராட்சி 10வார்டு திமுக கவுன்சிலராக ரெத்தினகுமாரி உள்ளார். இவரது கணவர் கண்ணன் தலையணை மெத்தை வியாபாரம் செய்து வருகிறார். நேற்று காரில் தஞ்சை நோக்கி சென்றபோது பாபநாசம் அருகே கம்பிகள் ஏற்றி வந்த மினிலாரி கார் மீது மோதியது. இதில் மினி லாரியில் இருந்த கம்பிகள் காரின் மீது விழுந்ததில் கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
வெளி மாவட்ட விசைப் படகுகளால் பாதிக்கப்படுவதாக தஞ்சாவூா் மீனவா்கள் மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத் துறை ஆய்வாளரிடம் புகார் மனு அளித்தனா். காரைக்கால் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சோ்ந்த விசைப்படகு மீனவர்கள் சட்டவிரோதமாக பாக். ஜலசந்தி கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட இரட்டை மடிவலைகளை பயன்படுத்தி மீன்பிடித்து வருவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று டிசம்பர் 23 திங்கள்கிழமை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் திருமதி பிரியங்கா பங்கஜம் தலைமையில் வங்கியாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வங்கி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வங்கி அலுவலர்களுடன் கடன் கொடுப்பது, கடன் வசூலிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் வீ.வடிவழகன் (52). விசைப்படகு உரிமையாளர், யாரும் இல்லாத போது இவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் பீரோவுக்குள் இருந்த 11 பவுன் தங்க நகைகள், ரூ. 2 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருள்களை திருடி சென்றுள்ளனர். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் பேராவூரணி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.