India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர் மாநகராட்சி, ஒப்பந்த தூய்மைப் பணியாளர் மற்றும் ஓட்டுநர் சங்கம் சார்பில், திங்கள்கிழமை காலை மாநகராட்சி முன்பு, ஊதியம் வழங்காதது, சீருடை பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கலியபெருமாள் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆனந்தராஜ், செயலாளர்கள் உஷா, முனியம்மாள் முன்னிலை வகித்தனர்.
நல்லமான்புஞ்சை பகுதியை சேர்ந்தவர் தயாநிதி (29). இவருக்கு திருமணம் ஆகி ஓராண்டுகள் ஆன நிலையில் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, வீட்டை விட்டு நேற்று வெளியேறிய நிலையில் இன்று நவக்கொல்லை பிடாரியம்மன் கோவில் அருகே உள்ள தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் அவர் உடலை மீட்டு திருச்சிற்றம்பலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்பகோணம் மேற்கு காவல் நிலைய எல்லைப் பகுதியில் கைபேசிகள் திருடு போனது பற்றி பல புகாா்கள் வரப்பெற்றன அதன் பேரில், போலீஸாா் தனிப்படை அமைத்து திருடு போன கைபபேசிகளை மீட்டனா்.அவற்றை உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு துணைக்கோட்ட காவல் கண்காணிப்பாளா் கீர்த்தி வாசன் தலைமையில் நேற்று மேற்கு காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இதில் 5 லட்சம் மதிப்புள்ள 28 கைபேசிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
தஞ்சாவூர் மாவட்டத்தில், மணிமண்டபம், முள்ளுக்குடி, வீரநரசன்பேட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.07) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதனால்,முள்ளுக்குடி, குறிச்சி, கதிராமங்கலம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவையாறை அடுத்த தில்லைஸ்தானம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் இலங்கேஸ்வரன் (28). தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி இவருக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று இலங்கேஸ்வரன் பணியை முடித்து விட்டு தனியார் பேருந்து ஒன்றில் வீடு திரும்பிய போது, நிலைத் தடுமாறி பேருந்தில் இருந்து கீழே விழுந்ததில் உயிரிழந்தார். இதுகுறித்து நடுக்காவேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுக்கூர் ஒன்றியம் புலவஞ்சி ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர்.கோவி.செழியன் அவர்கள் இன்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ச.முரசொலி, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் திரு.துரை சந்திரசேகரன், திரு.கா.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), மாவட்ட வருவாய் அலுவலர் திரு.தெ.தியாகராஜன் , பலர் கலந்து கொண்டனர்.
நாஞ்சில் கோட்டையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ்(52) என்பதும், கள்ளச் சந்தையில் விற்பனை செய்ய 90 மது பாட்டில்களை வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 90 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
திருவையாறு பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை. இவர் 12 வயதான 8-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் சாக்லேட் வாங்கி தருவதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் திருவையாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.அதன் பேரில் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜதுரையை கைது செய்தனர்.
சீர் மரபினர் நல வாரியத்தில் சேர்ந்து நலத்திட்ட உதவிகள் பெற சீர் மரபினர் நலவாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். எனவே இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்திட பட்டுக்கோட்டை வட்ட அலுவலகத்தில் ஜன.7 மற்றும் பேராவூரணி வட்ட அலுவலகத்தில் ஜன.10 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி தஞ்சை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக ஆர்.ராஜாராம் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று (ஜன.4) சனிக்கிழமை தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆர்.ராஜாராம் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.