Thanjavur

News January 10, 2025

திட்டமிட்டு உழைத்தால் போட்டி தேர்வில் சாதிக்கலாம் – மாவட்ட ஆட்சியர்

image

தஞ்சை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்4 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் அரசு பணி என்பது மதிப்பை உயர்த்தும், பெற்றோருக்கு பெருமையை தரும். கடின உழைப்பும் முறையான பயிற்சியும் வெற்றி பெற உதவும். திட்டமிட்டு படித்தால் போட்டி தேர்வுகளில் சாதிக்கலாம் என அவர் தெரிவித்தார்.

News January 10, 2025

தஞ்சை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

image

போகிப் பண்டிகையின் போது பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள் மற்றும் ரசாயனம் கலந்த பழைய பொருட்களை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு, மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற உடல்நல பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நடப்பாண்டில் உரிய வழிமுறைகளை பின்பற்றி ‘மாசற்ற போகிப் பண்டிகையை கொண்டாடுவோம்’ என தஞ்சை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். SHARE NOW!

News January 10, 2025

திருக்காட்டுப்பள்ளி அருகே தந்தைக்கு அரிவாள் வெட்டு: மகன் கைது

image

நேமம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் சங்கிலிமுத்து (60). இவர் தனது ஆட்டுக்குட்டி சரியாக கவனிக்காததால் இறந்து விட்டதாக தன் மகன் கார்த்தியை (38) கண்டித்தாராம். இதில் ஆத்திரமடைந்த கார்த்தி கையில் இருந்த அரிவாளால் தந்தையை வெட்டியதில் அவர் பலத்த காயம் அடைந்து, தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்தபுகாரின் பெயரில் கார்த்தியை கைது செய்தனர்.

News January 9, 2025

தஞ்சாவூர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து சாலை பாதுகாப்பு வாரம் பேரணி

image

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து 36 வது ஆண்டு சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு மற்றும் காவல்துறை இணைந்து நடத்திய மாபெரும் சாலை பாதுகாப்பு பேரணியை முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி பூரண ஜெய ஆனந்த் கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் காவல்துறையினர் வழக்கறிஞர் கலந்து கொண்டனர்.

News January 9, 2025

ஜனவரி 12ம் தேதி டாஸ்மாக் கடைகளை முட கோரிக்கை

image

சுவாமி விவேகானந்தரின் 162 வது ஜெயந்தி விழா வருகின்ற ஜனவரி 12ம் தேதி நாடு முழுவதும் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட உள்ளது. உலக அரங்கில் இந்தியாவின் பெருமை எடுத்துரைத்த பன்முகத்தன்மை கொண்ட மகான் சுவாமி விவேகானந்தரின் ஜெயந்தி விழா அன்று இளைஞர்களை நல்வழிப்படுத்தும் வகையில் அன்று ஒரு நாள் மதுக்கடைக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசை வலியுறுத்தி சார் ஆட்சியரிடம் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா கோரிக்கை

News January 9, 2025

கூட்டுறவு நிறுவன பணியாளர்களின் குறைதீர்க்கும் கூட்டம்

image

கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களின் குறைகள் தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையான நாளை (ஜன.10) காலை 11.00 மணிக்கு தஞ்சாவூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் பணியாளர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.எனவே, நிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் தங்களது பணி தொடர்பான குறைகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

News January 9, 2025

தஞ்சை தொழில் முனைவர் திட்டத்தின் கீழ் வங்கி கடன்

image

முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவுத் (CM-ARISE) திட்டத்தின் கீழ் திட்ட மதிப்புத்தொகையில் 35% அல்லது ரூ. 3.50 லட்சம் இவற்றில் எது குறைவானதோ அத்தொகை மானியத்துடன் கூடிய வங்கிக்கடனுடன் வழங்கப்படும் எனவும், இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம் என தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News January 8, 2025

தஞ்சை மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

image

தஞ்சை மாவட்டத்தில் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தஞ்சை மாவட்டத்தில் நாளை முதல் 9, 10, 11, ஆகிய தேதிகளில் மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் வரும் ஜனவரி 11ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

News January 8, 2025

தஞ்சை மாநகராட்சி சிட்டி 2.0 ஆய்வுக்கூட்டம்

image

தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் தஞ்சை மாநகர மேயர் சன் ராமநாதன் தலைமையில் இன்று (ஜன.08) சிட்டி 2.0 பற்றி மாநகராட்சி ஆணையர் மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசனை நடைபெற்றது. இதில் தஞ்சை மாநகராட்சியின் மேற்கொள்ளப்பட இருக்கும் பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றன. இதில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News January 8, 2025

வேலை வாய்ப்பு மையத்தில் பயிற்சி வகுப்பை தொடக்கம்

image

தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்IV தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் இன்று (ஜன.08) துவக்கி வைத்தார்கள். இந்த நிகழ்வின்போது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை உதவி இயக்குநர் கா.பரமேஸ்வரி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!