India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக வெற்றிக் கழக
தலைவர் விஜய் தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் அறிவித்துள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழக தஞ்சை மத்திய மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் இரா.விஜய்சரவணன் மற்றும் மத்திய மாவட்ட கழக நிர்வாகிகள் அனைவருக்கும்
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தஞ்சை மாவட்டத்தில் ஜனவரி மாதத்திற்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (ஜன.25) சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தாலுக்கா மற்றும் வட்ட வழங்கல் அலுவலங்கங்களில் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்களுக்கு குறைகள் ஏதும் இருப்பின் தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுக்களை அளித்து உடனடியாக பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
மருங்கப்பள்ளம் பகுதியில் ஸ்ரீ சிவபெருமான் திருக்கோவிலில் தை மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று (ஜன.24) அங்குள்ள சிவபெருமானுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள் போன்ற வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பித்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பேராவூரணி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்த மூன்று கடைகளில் இருந்து 75 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். போதை விற்பனை செய்த நான்கு பேரை கைது செய்து , அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்ட செய்தி குறிப்பில், பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் வருகிற 28ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் சில நிர்வாக காரணங்களால் இந்த முகாம் ஒத்திவைக்கப்பட்டு, மறுநாள் வருகிற 29ஆம் தேதி நடைபெறும் என ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் ஆட்சியரகத்தில் ஆய்வுக்கூடத்தில் தெரிவித்தது, தஞ்சாவூரில் மனிதநேய வார விழா இன்று முதல் ஜன. 30 வரை நடைபெறும், இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாணவர்கள் மற்றும் தென்னகப் பண்பாட்டு மையம், கலை சார்பிலும் கலை நிகழ்ச்சிகளும், மாணவர்களுக்கான, போட்டிகளும், மாணவர்களுக்கான பரிசு வழங்குதல் விழாவும் நடைபெறும் என தஞ்சாவூர் ஆட்சியர் பிரியங்கா தெரிவித்துள்ளார்,
பந்தநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருப்பூர் மேலத்தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது சட்ட விரோதமாக புதுச்சேரி யூனியன் பிரேதச சாராய மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1510 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. கலியபெருமாள் மற்றும் சுமதியை 20ம் தேதி கைது செய்த நிலையில் இன்று (ஜன.23) மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தஞ்சையில் நாளை (ஜன.24) பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அறிஞர் அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில், மாவட்டத்தில் உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கல்விக் கடன் வழங்கும் முகாமை மாவட்ட நிர்வாகமும், அனைத்து வங்கிகளும் இணைந்து பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தவுள்ளன. உயர்கல்வி பயிலும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் கேட்டுக் கொண்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வருகிற 24-ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறப்படுகிறது. இதில் முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு காலி பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடைய ஆட்சியர் கேட்டு கொண்டுள்ளார் SHARE NOW
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் கோட்டத்திற்கு உட்பட்ட கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் (ஜன.23) ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணியளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே, தஞ்சாவூர் வட்டங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு தஞ்சாவூர் கோட்டாட்சியர் செ. இலக்கியா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.