India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024-25 ஆம் கல்வியாண்டில் மேற்படி அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட,மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ/மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள், https://umis.tn.gov.in இதில் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் 28.02.2025 என மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பில் வெளியீடு.
பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 56 வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (பிப்.3) தஞ்சை கீழவாசல் காமராஜர் சிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் MLA, தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் முன்னாள் மத்திய அமைச்சர், மாவட்ட நிர்வாகிகள் சி.இறைவன், திரு. து. செல்வம், N.தர்மராஜன், மேயர், துணை மேயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் வீரமணி (20). இரும்பு கடையில் வேலை பார்த்து வந்த இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகளை கூறி பல முறை தனிமையில் பழகியுள்ளார். இந்நிலையில் கடந்த ஜன.15 ஆம் தேதி சிறுமியை தனது வீடு அழைத்த வீரமணி அவரை கடுமையாக தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் குடந்தை போலீசார் வீரமணியை போக்சோவில் கைது செய்தனர்.
கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் 20 வயது மதிக்கத்தக்க மாணவி திருமணம் ஆகாத நிலையில் கர்ப்பம் அடைந்துள்ளார். நேற்று (பிப்.1) பிரசவ வலி ஏற்பட்டு கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்து youtube பார்த்து தொப்புள் கொடி அறுத்து யாருக்கும் தெரியாமல் குப்பை தொட்டியில் போட்டு மூடிவிட்டு வகுப்பறைக்கு சென்றுள்ளார். இரத்த போக்கு அதிகமானதால் இச்சம்பவம் வெளியாகி இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சடைவழந்தை தங்கதுரை மகன் ராஜாராமன் (26). திருக்காட்டுப்பள்ளியில் (ஜன.30) பைக்கில் வரும் போது கூத்தூர் எடை மேடை அருகே வாழைக் கொல்லையிலிருந்து அதிவேகத்தில் வந்த டாட்டா ஏசி மோதியதில் ராஜாராமன் படுகாயம் அடைந்தார். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியிலேயே உரிழந்துவிட்டார். திருக்காட்டுப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தினர்.
கும்பகோணம் அருகே இரண்டாம் கட்டளை பகுதியை சோ்ந்தவா் கருணாகரன் (43). கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலக உதவியாளராக பணியாற்றும் இவர், நேற்று (ஜன.31) உறவினர் வீட்டு துக்க நிகழ்வில் பங்கேற்று விட்டு தன் டூவீலரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது காரைக்கால் மெயின்ரோடு சீனிவாசநல்லூா் பகுதியில் எதிரே வந்த டூவீலர் கருணாகரன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழக வெற்றி கழகத்தில் அனைத்து பகுதிகளிலும் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பாபநாசம் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய தஞ்சை வடக்கு மாவட்டத்தின் செயலாளராக தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி விஜய் நியமித்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
பண்டாரவடை பகுதியை சேர்ந்தவர் அற்புதராஜ் (30). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரை விஷப்பாம்பு கடித்துள்ளது. இதனையடுத்து உடனடியாக அவரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இது குறித்து பாபநாசம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய பகுதிகளில் வருவாய் துறை சார்பில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மாதம் 1,000 ரூபாய் தரவீதம் 4,17,999 பயணாளிகளுக்கு 41,79,99,000 பயன் பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேற்று (ஜன.29) வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான புதிய தொழிற்பள்ளிகள் தொடங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள் போன்ற விண்ணப்பங்கள் கடந்த 2-ந்தேதி முதல் பெறப்பட்டு, இதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (பிப்.28) -ஆம் தேதி வரை www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.