India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வாழவந்தான் கோட்டை ஏரி நீர் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கும் நிலையில், 16 ஏரிகள் உய்யக் கொண்டான் நீடிப்பு வாய்க்கால் மூலம் பயன் பெற்று வரும் நிலையில், ஏரி நீர் திறக்கப்படுமா என்றும், ஏற்கனவே சுற்று வட்டார பகுதியில் நீரின்றி நிலத்தடி நீர்மட்டம் குறைந்த நிலையில், ஆடு மாடுகள் கூட நீரின்றி சிரமப்பட்டு வருகிறது. எனவே தண்ணீர் திறக்கப்பட்டால் பயனுள்ளதாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கும்பகோணம் நகரின் மையப்பகுதியில் மடத்து தெருவில் அருள்பாலித்து வரும் பகவத் விநாயகர் கோயில், காசி விஸ்வநாதர் கோயிலின் இணை கோயிலாக திகழ்ந்து வருகிறது. பிரசித்தி பெற்ற கோயில் காசியை விட அதிக புண்ணியம் கொண்டதாக திகழ்கிறது. இங்கு பகவத் விநாயகர் நவக்கிரகங்கள் குடி கொண்டுள்ளனர். இதனையடுத்து விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகருக்கு ரூபாய் நோட்டுக்களை கொண்டு கரன்சி அலங்காரம் செய்து வழிபட்டனர்.
தஞ்சையை சேர்ந்த அருண்குமார் தனது மனைவியின் வளைகாப்பு விழாவிற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக நண்பர் சாரோன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதேபோல் பள்ளத்தூரை சேர்ந்த அரவிந்தன் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். பட்டுக்கோட்டை அருகே இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சாரோன் மற்றும் அரவிந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திருவிடைமருதூரில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா இன்று நடைபெற்றது. அப்போது ஒன்றிய அரசு நிதி வழங்காததை ஏற்கனவே முதலமைச்சர் கண்டித்துள்ளார். இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சரும், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சரை சந்தித்தனர். மீண்டும் அவர்கள் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என வற்புறுத்துவது மாநில உரிமைகளுக்கு எதிரானது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
திருவையாறு பகுதியில் செல்போன் டவர் இருந்தும் பிஎஸ்என்எல் மொபைல் நெட்வொர்க் கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் கடும் அவதி. இந்த நிலையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தஞ்சை வடக்கு மாவட்டம் திருப்பனந்தாள் மே ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம் மயிலாடுதுறை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செ.இராமவிங்கம் மற்றும் தமிழக அரசின் தலைமை கொறடா கோ.செழியன்ஒன்றிய அவைத்தலைவர் புகழேந்தி தலைமையில் திருப்பனந்தாள் கலைஞர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருப்பனந்தாள் கிழக்கு ஒன்றிய செயலாளர் மிசா.மனோகரன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கும்பகோணம் மாநகராட்சி, 2 வது வார்டு, யானையடி, அறிவொளி நகரில் வசித்து வரும் இளங்கோவன் ராஜாங்கம், கோமளவள்ளி பால்ராஜ் மற்றும் குமார் சுந்தர்ராஜ் ஆகியோரது மூன்று குடிசை வீடுகள், இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் மிகவும் சேதமடைந்தன. தகவல் அறிந்த, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன், நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து உதவினார்.
பட்டுக்கோட்டை வட்டம், கீழ கொள்ளுக்காடு கிராமத்தைச் சோ்ந்த குமாா்-அன்னக்கிளி தம்பதி மகன் கு.ஆகாஷ்(19). அனந்தகோபாலபுரம் அரசுப் பள்ளியில் பயின்றுள்ளார். நிகழாண்டில் நடைபெற்ற நீட் தோ்வு எழுதிய ஆகாஷ், 524 மதிப்பெண்களை பெற்றாா். இவா் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ், கோவை கற்பகம் மருத்துவ கல்லூரியில் பயில்வதற்கான இடம் கிடைத்துள்ளது. மாணவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரியில் நேற்று நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 72 தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டன். மேலும் 1,452 பேர் இளைஞர் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்றனர். இதில் 316 பேருக்கு பல்வேறு நிறுவனங்களில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
தஞ்சை தொகுதி கீழவாசல் பகுதி மற்றும் மருத்துவக் கல்லூரி பகுதிகளில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ச.முரசொலி எம்பி மக்களை சந்தித்து நன்றி கூறும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தஞ்சை எம்.எல்.ஏ. டி.கே.ஜி. நீலமேகம், தஞ்சை மாநகராட்சி மேயர் சன் ராமநாதன் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.