India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநீலக்குடி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட நரசிங்கம்பேட்டை மெயின் ரோட்டில் உள்ள அம்மாக்குளத்தில் அடையாளம் (ம) பெயர் விலாசம் தெரியாத சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த திருநீலக்குடி காவல் உதவி ஆய்வாளர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் உள்ள நடராஜருக்கு மஞ்சள் சந்தனம், பால், தயிர், திரவிய பொடி, பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜ பெருமானை வழிபட்டனர்.
திருவையாறில் தியாகராஜரின் 178வது ஆராதனை விழா வருகிற 14-ஆம் தேதி தொடங்கி ஐந்து நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் மராட்டிய மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு தொடங்கி வைக்க உள்ளார். ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பிரபல கர்நாடக இசை கலைஞர்கள் கலந்து கொண்டு இசைய அஞ்சலி செலுத்த உள்ளனர்.
தஞ்சை புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பாலியல் தொழில் நடப்பதாக தஞ்சை மருத்துவ கல்லூரி போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் நடத்திய சோதனையில் சீதா (35) என்பவர் அப்பகுதியில் ஒரு வீட்டை வாடகை எடுத்து பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அங்கிருந்து ஒரு பெண்ணை மீட்டு காப்பகத்தில் அனுமதித்தனர்.
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளரான வி.சி. சந்திரகுமாருக்கு ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது என பாபநாசம் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள பூ சந்தைகளில் நேற்று (ஜன.12) மல்லிகைப்பூ கிலோ ரூ.3,000, முல்லைப்பூ கிலோ ரூ.2,500 என விற்பனையாகி சில்லறை வியாபரிகளையும், பொதுமக்களையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. இருப்பினும் பொதுமக்கள் ஆர்வமுடன் பூக்களை வாங்கிச் சென்றனர்.
கருப்பூர் மேலத்தெரு பகுதியில் சட்டவிரோதமாக காரைக்காலிலிருந்து பாண்டிச்சேரி மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பந்தநல்லூர் போலீசார் அந்த இடத்திற்கு சென்று தீவிர சோதனை மேற்கொண்டதில் சுமார் 1300 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டு குற்றவாளிகளான அசோதமன் மற்றும் அனுசியா ஆகியோரை கைது செய்ததாக காவல் கண்காணிப்பாளர் செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளார்.
பட்டுக்கோட்டை கொண்டப்ப நாயக்கன் பாளையம் தெருவில் புனித தாமஸ் அரசு உதவி பெறும் பள்ளி உள்ளது. நேற்று வழக்கம்போல பணிக்கு வந்த தலைமை ஆசிரியர், அறையின் பூட்டு உடைக்கப்பட்டு 25,000 கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த திருட்டு குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சையில் இருந்து சென்னைக்கு செல்லும் உழவன் விரைவு ரெயில் கடந்த ஆண்டு வரை சென்னையில் இருந்து இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு அதிகாலை வேளையில் தஞ்சை வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் ரயிலின் நேரம் மாற்றப்பட்டு இரவு 10.25 மணிக்கு சென்னை எழும்பூரில் புறப்பட்டு மறுநாள் காலை ஆடுதுறை 4.17 மணிக்கும், கும்பகோணம் 4.28 மணிக்கும், பாபநாசம் 4.39 மணிக்கும் வந்து தஞ்சைக்கு காலை 5.30 மணிக்கு வந்து சேருகிறது. SHARE!
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை விழாவினை முன்னிட்டு வரும் 18.01.2025 (சனிக்கிழமை) அன்று ஒருநாள் மட்டும் தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.