India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (18-ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திருக்காட்டுப்பள்ளி, கல்லணை, திருமலைசமுத்திரம், செங்கிப்பட்டி, வல்லம்புதூர், கும்பகோணம் நகர், ராஜந்தோட்டம், பட்டுக்கோட்டை டவுன், துவரங்குறிச்சி, ஒரத்தநாடு 33 கி.வி. ரேஷியோ மட்டும், நகரம், புதூர், கருக்கடிப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது.
தமிழக முழுவதும் பொங்கல் பண்டிகையையொட்டி மது விற்பனை அமோகமாக நடந்து வந்தது. பண்டிகை என்றாலே அதில் மதுவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் பொங்கல் பண்டிகையை ஒட்டி மது பிரியர்கள் மூலம் ரூபாய்.20 3/4 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளது. மதுக்கடை விடுமுறை நாட்களில் மது பாட்டில்கள் இரண்டு மடங்கு வரை விற்கப்படுகிறது .
தமிழக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனின் பிறந்த நாள் விழா (ஜன-17) தமிழகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவர் தனது ஆரம்ப கல்வியை கும்பகோணத்தில் உள்ள யானையடி தொடக்க பள்ளியில் 1922 -1925 பயின்றார். இந்நிலையில் தான் முதல்வரான பிறகு மீண்டும் அதே பள்ளிக்குச் சென்ற அவர், பள்ளி சேர்க்கை பதிவேட்டில் தனது பெயரை கண்டு கண்கலங்கியுள்ளார்.
தஞ்சை மாவட்டத்தில் 138 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்நிலையில் பொங்கல் பண்டிகை காரணமாக கடந்த ஜன.13,14 ஆகிய தேதிகளில் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் ரூ.20 கோடியே 79 லட்சத்து 2 ஆயிரத்து 795-க்கு மது விற்பனையாகி உள்ளது. மாட்டுப் பொங்கல் தினத்தன்று தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், மதுப்பிரியர்கள் தைப்பொங்கல் தினத்தன்றே மதுவை வாங்கி குவித்ததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்ட காவல்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து குற்ற சம்பவங்களையும் உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில் 89395-24100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் அருகேயுள்ள கூடலூர் கிராமத்தில் வெண்ணாற்றில் மீனவர்கள் நேற்று (ஜன.15) காலை மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, வலையில் சிறிய முதலை சிக்கியுள்ளது. இதையடுத்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், வலையில் சிக்கிய 3 அடி நீளமுள்ள குட்டி முதலையை வனத்துறை மீட்டனா். பின்னா், கும்பகோணம் அருகேயுள்ள அணைக்கரை முதலைகள் காப்பக வளாகத்தில், மீட்கப்பட்ட முதலை விடப்பட்டது.
ஒரத்தநாடு அருகே ஆண்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி பிரியா (31). தைப்பொங்கல் தினத்தன்று பிரியா, அவரது கணவர் மற்றும் 2 குழந்தைகள் மன்னார்குடியில் இருந்து ஆண்டிபட்டிக்கு டூவிலரில் சென்றுள்ளனர். அப்போது மேலவன்னிப்பட்டு பிரிவு சாலை அருகே பிரியா டூவீலரில் இருந்து தவறி விழுந்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை பெரு ஆவுடையார் கோவிலில் மாட்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பல்வேறு வகையான காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் தஞ்சை மட்டுமின்றி அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நந்தி பகவானை வழிபட்டுச் சென்றனர்.
உலக பொதுமறை தந்த திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இன்று தஞ்சையில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அய்யன் திருவள்ளுவர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் திமுக கழக நிர்வாகிகள், கழக மூத்த முன்னோடிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தஞ்சை-விக்கிரவாண்டி இடையே, புதிய புறவழிச்சாலை (NH.45 சி) 164.28 கிலோ மீட்டர் துாரம் அமைக்கும் பணி கடந்த 2018ம் ஆண்டு துவங்கியது. இந்நிலையில், தஞ்சை-சோழபுரம் இடையே சாலைப்பணிகள் நிறைவு பெற்று, வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதால், பாபநாசம் அருகே வேம்புக்குடியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியில் வரும் ஜன.20 முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. SHARE NOW!
Sorry, no posts matched your criteria.