Thanjavur

News January 20, 2025

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஓர் அழகிய கடற்கரை

image

தஞ்சை மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற கோவில்கள், அரண்மனைகள் என விடுமுறை நாட்களை குடும்பத்துடன் செலவிட பல இடங்கள் அமைந்துள்ளன. ஆனால் தஞ்சை மாவட்டத்தில் அழகிய கடற்கரைகளும் உள்ளன என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? அப்படி ஒரு இடம் தான் பட்டுக்கோட்டை அருகே அமைந்துள்ள புதுப்பட்டினம் கடற்கரை. வெண்ணிற மணல் அமைதியான சுற்றுப்புறம், ஆர்ப்பரிக்கும் அலைகள் என மிக அழகான இந்த கடற்கரைக்கு நீங்கள் சென்றது உண்டா?

News January 20, 2025

பாபநாசம் தாலுகாவில் 22-ஆம் தேதி மக்கள் நேர்காணல் முகாம்

image

பாபநாசம் தாலுகாவில் 22-ஆம் தேதி மக்கள் நேர்காணல் முகாம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் சாலியமங்கலம், சரகம், திருபுவனம் கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவில் அருகில் உள்ள கலையரங்கத்தில் நடைபெற உள்ளது இம் முகாமில் பொதுமக்கள் தங்களது மேலான கோரிக்கைகளை மனுக்களாக அளித்து உடனடி தீர்வு பெறலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சி பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்

News January 20, 2025

வருகிற 21ஆம் தேதி மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

image

தமிழ்நாடு மின் உற்பத்தி கழக தஞ்சை நகரிய செயற்பொறியாளர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தஞ்சை நகர் பொதுமக்களின் நலன் கருதி மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 21ஆம் தேதி மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நீதிமன்ற சாலையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. தஞ்சை நகர பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

News January 20, 2025

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை மின்தடை

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை (ஜன.21) பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் திருக்கானுர்பட்டி, குருங்குளம், ஆடுதுறை, பேராவூரணி, கும்பகோணம் கிராமப்புற பகுதிகள், தஞ்சாவூர் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. SHARE NOW!

News January 19, 2025

9 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் – ஆட்சியர்.

image

தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் பணிபுரிந்து வரும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலராக தற்காலிக பதவி உயர்வுடன் கூடிய பணி நியமனமும், நிர்வாக நலன் கருதி வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் பணியிட மாறுதல் வழங்கியும் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவு பிறப்பித்துள்ளார். 9 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர், 3 பேர் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

News January 19, 2025

புண்ணைநல்லூர் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு

image

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் குடமுழுக்கு செய்ய முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,பிப்ரவரி 3-ம் தேதி காலை 7.25 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்குகிறது. பின்னா், 7-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் முதல் கால யாக பூஜையும், பிப்ரவரி-10 காலை 9.30-10.30 க்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

News January 19, 2025

மியான்மர் நாட்டு பெண்ணை மணந்த தஞ்சை இளைஞர் 

image

திருக்காட்டுப்பள்ளி சேதுபதி (28). ஐடிஐ முடித்துவிட்டு சிங்கப்பூரில் தனியார் கம்பெனியில் மெக்கானிக் சூப்பர்வைசராக பணி புரியும் போது அவருடன் பணியில் இருந்த சுமிதா என்ற மியான்மர் நாட்டு பெண்ணுடன் காதல் ஏற்பட்டு மியான்மர் நாட்டில் நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர் அதனை தொடர்ந்து இன்று திருக்காட்டுப்பள்ளி – பூண்டியில் தனியார் திருமண மண்டபத்தில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.

News January 19, 2025

தஞ்சை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் 30 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் இன்று (ஜன.19) மதியம் 1 வரை லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!

News January 19, 2025

தஞ்சை: போட்டி தேர்வுகளுக்கு நாளை முதல் இலவச பயிற்சி

image

மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி வளாகத்தில் இயங்கி வரும் தஞ்சை அறிவுசார் மையத்தில் நாளை (ஜன.20) மதியம் 1.30 மணி முதல் TNPSC குரூப்-1, 2, 4 தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது. கணினிகள், இணையதள வசதி, புத்தங்கங்கள், செய்தித்தாள், உணவு என அனைத்து வசதிகளையும் கொண்ட இந்த இலவச பயிற்சியில் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் எனத் அறிவுசார் மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!

News January 18, 2025

தஞ்சை மாவட்டத்தில் இன்று மின்தடை

image

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (18-ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திருக்காட்டுப்பள்ளி, கல்லணை, திருமலைசமுத்திரம், செங்கிப்பட்டி, வல்லம்புதூர், கும்பகோணம் நகர், ராஜந்தோட்டம், பட்டுக்கோட்டை டவுன், துவரங்குறிச்சி, ஒரத்தநாடு 33 கி.வி. ரேஷியோ மட்டும், நகரம், புதூர், கருக்கடிப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது.

error: Content is protected !!