India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சையில் உள்ள முருகனின் அறுபடை வீடு, முதல் படைவீடு: சுப்பிரமணிய சுவாமி கோயில், அலங்கம். இரண்டாம் படைவீடு: சுப்பிரயமணிய சாமி கோயில், பூக்கார தெரு. மூன்றாம் படைவீடு: பாலதண்டாயுதபாணி கோயில் சின்ன அரிசிக்கார தெரு. நான்காம் படைவீடு: சுவாமிநாத சுவாமி கோயில், ஆட்டுமந்தை தெரு. ஐந்தாம் படைவீடு: பாலதண்டாயுதபாணி கோயில், குறிச்சி தெரு கீழவாசல். ஆறாம் படைவீடு: பால தண்டாயுதபாணி சுவாமி கோயில், வடக்கு அலங்கம்.
தஞ்சாவூர் கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் தங்கமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆதார் மற்றும் சர்வதேச தபால் சேவை சிறப்பு முகாம் வருகிற 15ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அந்தந்த கோட்டத்தில் நடைபெறும் இந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆதார் அட்டை திருத்தம், பெயர் மாற்றம், தொலைபேசி எண் மாற்றம் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் தற்போதே வெயிலில் தாக்கம் சதத்தை அடித்து விட்டது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சை மாவட்டத்தில் 100 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் வீட்ற்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கோடைகாலத்தில் இந்த வெப்ப தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
தஞ்சை கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் தங்கமணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சித்திரை திருவிழாவையொட்டி ஆதார் மற்றும் சர்வதேச தபால் சேவை சிறப்பு முகாம் வருகிற 15ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி தஞ்சை கோட்டத்தில் உள்ள தஞ்சை, மன்னார்குடி, பாபநாசம் தலைமை தபால் அலுவலகங்கள் மற்றும் ஆதார் சேவை மையம் உள்ள துணை தபால் அலுவலகங்களில் நடக்கிறது.
தஞ்சையில் உள்ள தனியார் நிறுவனத்தில் Assistant Manager பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி துறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ரூ.15,000 ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கே <
தஞ்சையின் இப்படி ஒரு இடமா என்று வியக்கவைக்கும் இடம் தான் மனோரா. தஞ்சாவூரில் இருந்து 65 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது தான் மனோரா கோபுரம். பெரும்பாலும் தஞ்சை என்றதும் விவசாய பூமி,தஞ்சை கோவில் தான் நியாபம் வரும் ஆனால் பலருக்கும் தெரியாத உண்மை என்னவென்றால் தஞ்சையில் மனோரா கடற்கரை என்ற இடம் உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வரலாற்று கோபுரத்தையும் கடற்கரை அழகையும் வியந்து பார்க்கின்றனர். ஷேர் பண்ணுங்க
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களை இலவசமாக செய்து கொள்ளலாம் கட்டணம் இல்லை. ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE செய்து உதவவும்.
தஞ்சை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரசு உதவி எண்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04362-230121, மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1077, விபத்து அவசர வாகன உதவி – 102, குழந்தைகள் பாதுகாப்பு – 1098, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் – 1800 425 3993, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் – 18004250111, காவல் கண்காணிப்பாளர் – 04362-277110. பிறரும் தெரிந்து கொள்ள இதை SHARE செய்யவும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியுடையவர்கள் <
Sorry, no posts matched your criteria.