Thanjavur

News September 17, 2024

தஞ்சை: மனு எழுதி கொடுக்க ரூ.20 மட்டுமே வசூலிக்க வேண்டும்

image

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் மனு அளிக்க வரும் எழுத, படிக்க தெரியாத நபர்களிடம் ரூ.100-200 வரை மனு எழுதி கொடுக்க வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் மனு ஒன்று எழுதி கொடுக்க ரூ.20 மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பிரியங்கா நேற்று நேரில் சென்று எச்சரித்தார்.

News September 17, 2024

ஆதார் இ சேவை மையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஆதார் இ-சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்து, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் நேற்று (16.9.24) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் இருந்தனர்.

News September 16, 2024

பட்டுக்கோட்டையில் ஒருவர் அடித்துக் கொலை

image

பட்டுக்கோட்டை முத்துப்பேட்டை சாலையில் தண்ணீர் பாட்டில் விற்பனை கடை தம்பு என்பவர் நடத்தி வந்துள்ளார். அவர் கடையின் உள்ளேயே இன்று அதிகாலை மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். கடையில் வேலை பார்த்து வந்தவரே அவரை கொலை செய்திருக்கலாம் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து பட்டுக்கோட்டை சரக டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News September 16, 2024

திருக்காட்டுப்பள்ளி அருகே ஆண் சடலம் மீட்பு

image

திருச்சி பத்தாளப்பேட்டையை சேர்ந்த சுரேஷ், திருவெறும்பூர் அடுத்த கல்லணை கால்வாயில் நேற்று மகளுடன் குளிக்கச் சென்றார். அப்போது இருவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் அவர்களின் உடலை போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் தீவிரமாக தேடி வந்த நிலையில் இன்று திருக்காட்டுப்பள்ளி அருகே கோவிலூரில் சுரேஷின் உடல் மீட்கப்பட்டது. பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News September 16, 2024

தஞ்சாவூரில் விலை உயர்வு

image

தஞ்சாவூர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை விவரம் தக்காளி ரூ.34க்கும், கத்தரிரூ.36க்கும், வெண்டை ரூ.20க்கும், புடலை ரூ.22,26க்கும், அவரை ரூ.44, பாகல் ரூ.38,
முள்ளங்கி ரூ.34, முருங்கை ரூ.50, கொத்தவரை ரூ.26, மிளகாய் ரூ.40, பீர்க்கங்காய் ரூ.34, பரங்கி ரூ.18, பூசணி ரூ.18,
சுரைக்காய் ரூ.16, வாழைக்காய் ரூ.30, தேங்காய் ரூ.35, காலிபிளவர் ரூ.56, பீன்ஸ் ரூ.46, உருளை ரூ.46க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

News September 16, 2024

படுக்கை விரிப்பு விற்பனை செய்வது போல் திருட்டு

image

ரெட்டிபாளையம் அடுத்த சப்தகிரி நகரில் வசிக்கும் ரமணன் வீட்டுக்கு, நேற்று முன்தினம் வந்த மர்ம நபா், படுக்கை விரிப்பு விற்பனை செய்வது போல் பேசியுள்ளார். பின்னர் அவர் தண்ணீா் கேட்க, நாகராஜன் தண்ணீா் எடுக்க உள்ளே சென்றுள்ளார். அப்போது மா்ம நபா் வீட்டிற்குள் நுழைந்து ரூ.7 ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளார். பின்னர் அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News September 15, 2024

தஞ்சை வீட்டில் கழக கொடியேற்றிய திமுக எம்பி

image

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மற்றும் திமுக கழக பவள விழாவை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையின் படி இல்லந்தோறும் கொடியேற்ற உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் முரசொலி இன்று அவரது இல்லத்தில் கொடியேற்றினர்.

News September 15, 2024

தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

தஞ்சாவூர் கீழவாசல் சிரோஸ் சத்திரம் அன்பாலயம் மன நல காப்பக கட்டிடத்தின் பணிகள் குறித்தும், அரண்மனை வளாகத்தில் உள்ள அரசர் மேல்நிலைப் பள்ளியில் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் நேற்று நேரில் ஆய்வு செய்தார். இதில் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

News September 15, 2024

தஞ்சாவூரில் ரூ. 17.75 கோடிக்கு தீர்வு

image

தஞ்சாவூா் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 302 வழக்குகளில் ரூ. 17.75 கோடி அளவுக்கு தீா்வு காணப்பட்டது. தஞ்சாவூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் மாவட்டத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசமாகப் பேசி தீா்வு காண்பதற்காக தேசிய அளவிலான சிறப்பு மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

News September 15, 2024

தஞ்சை மாவட்டத்தில் ஒரு நாள் ஆன்மீக சுற்றுலா

image

தஞ்சாவூர் ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திவ்யதேச தலங்களான சாரங்கபாணி கோவில், உப்பிலியப்பன் கோவில் உள்ளிட்ட பல்வேறு 108 திவ்ய தேசங்களுக்கு ஒரு நாள் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் www.ttdconline.com இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் என‌ கூறப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்