India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மாதம் ரூ.23 000 முதல் ரூ.78,000 வரையிலான சம்பளத்தில் காலியாக உள்ள 246 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 18 முதல் 26 வயதுக்குள் இருக்கும் தகுதியானவர்கள் இங்கு <
கடந்த அக்டோபர் 17ஆம் தேதி தொண்டாம்தோப்பு பகுதியைச் சேர்ந்த சரவணன்-உஷா தம்பதியினர். இவரது குழந்தைக்கு உடல்நிலை சரி இல்லை என மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பும்போது பூண்டி பகுதியில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் வழிமறித்து நகைகளை பறித்து சென்றனர். அம்மாபேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகார் அடிப்படையில் போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். தற்போது 3 பேரை கைது செய்து நகைகளை பறிமுதல் செய்தனர்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு ஏற்படும் புகார்களை தெரிவிக்க வாட்ஸ்அப் எண் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 9445257000 என்ற எண்ணில் விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஏற்படும் புகார்களை தெரிவித்து உதவி கேட்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை (1/3/2025) சனிக்கிழமை வேலை நாள் என்று சுற்றி அறிக்கை வெளியாகியுள்ளது. கல்லூரி வேலை நாளை முன்னிட்டு மதிப்பீட்டு தேர்வு முடிவுகள் தெரிவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையை கண்டு கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 76 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க
8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் வியாழக்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது. கும்பகோணத்தை சேர்ந்த சேசாச்சலம் 63. இவர் கடந்த 2023, மே 14-ஆம் தேதி எட்டு வயது சிறுமியைப் பாலியல் தொந்தரவு செய்தார். தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கை நீதிபதி ஜெ. தமிழரசி விசாரித்து சேசாச்சலத்துக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் இன்று (பிப்.,28) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.
கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்தில் வன்னியர் சங்கத்தின் சார்பில் அண்மையில் நடத்தப்பட்ட சோழ மண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாடு நடந்த இடத்திற்கு அருகில் வளையப்பேட்டை என்ற இடத்தில் வி.சி.க.கொடிக்கம்பம் பாமக தொண்டர்களால் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மகா சிவராத்திரி விழாவையொட்டி, தஞ்சாவூர் பெரிய கோயிலில் புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை காலை வரை தொடர்ந்து சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதில், புதன்கிழமை இரவு 10 மணிக்கு முதல் கால பூஜையும், நள்ளிரவு 12.30 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், அதிகாலை 2 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், 4 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடைபெற்றன. இக்கோயிலுக்கு உள்ள பெத்தண்ணன் கலையரங்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கஞ்சா கடத்த முயன்ற 3 பேருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் புதன்கிழமை 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வழியாக பைபர் படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்த போதைப் பொருள் தடுப்புக் காவல் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. 10 சாக்குகளில் 135 பொட்டலங்களில் 296.5 கிலோ கஞ்சா இருந்தது. முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கே. முருகானந்தம், மகேந்திரன் , சசிகுமார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.