India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் பெறும் . மற்றும் PHH பயனாளிகளின் குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கைவிரல் ரேகையினை 28.02.2025க்குள் பதிவு செய்யப்பட வேண்டும். எனவே, AAY மற்றும் PHH பயனாளிகளின் குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து உறுப்பினர்கள் நியாய விலை கடைகளில் கை கைவிரல் பதிவு செய்யுமாறு ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வன்னியர் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள சோழ மண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாடு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு தாராசுரம் புறவழிச்சாலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.00 மணிக்கு நடைபெறவிருக்கிறது. மாநாட்டிற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தஞ்சாவூர் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க, வார விடுமுறை நாளான கடந்த ஜனவரி 10ஆம் தேதி, ரேஷன் கடைகள் செயல்பட்டன. இந்த வேலைநாளை ஈடுசெய்ய, இன்று (பிப்.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று சனிக்கிழமை (பிப்.22) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் அனைத்துதுறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் திரு.மா.ஆனந்குமார் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.தெ.தியாகராஜன் அவர்கள் மற்றும் அலுவலர்கள் உடன் உள்ளனர்.
திருச்சிற்றம்பலம் வலச்சேரிக்காடு சேர்ந்தவர் சேகர் கூலித் தொழிலாளி கடந்த 20 நாட்களுக்கு முன்பு மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை திருச்சிற்றம்பலம் கண்ணாகுளம் பகுதியில் உள்ள ஒரு வயலில் சேகர் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகர் எப்படி இறந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் வேலைவாய்ப்பு முகாம் அலுவலக வளாகத்தில் நாளை (பிப்.21) தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்பவர்கள் தங்களின் விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணிவாய்ப்பினை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்து கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். SHARE NOW.
கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும், கும்பகோணம் அரசு கவின்கலைக்கல்லூரி நடத்தும் ஓவிய, சிற்ப கலைக் கண்காட்சி, தஞ்சாவூர் மாவட்ட அருங்காட்சியகத்தில் நாளை தொடங்கவுள்ளது. இக்கண்காட்சியில் கல்லூரியில் பயிலும் வண்ணக்கலைத்துறை, காட்சிவழித்தகவல் வடிவமைப்புத்துறை மற்றும் சிற்பக்கலைத்துறை ஆகிய மூன்று துறைகளில் பயிலும் மாணவர்களுடைய கலைப் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்ட உள்ளது.
திருவையாறு வட்டம் புனவாசல் அருகே உள்ள பெரும்புலியூர் எனும் கிராமத்தில் சௌந்தரநாயகி உடனுறை வியாக்ரபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த திருத்தலத்திற்கு சென்று பிரிந்த கணவனோ, மனைவியோ அம்மனிடம் மனம் உருகி வேண்டினால் மீண்டும் இருவரும் இணைந்து வாழ்வார்கள் என்பது ஐதீகம். நீதிமன்றம் வரை சென்ற வழக்குகள் கூட இங்கு வந்து வணங்கிய பின் தீரும் என பக்தர்கள் கூறுகின்றனர். SHARE NOW.
தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜி, தனது காதல் மனைவியின் நினைவு சின்னமாக தஞ்சையை அடுத்த ஒரத்தநாட்டில் முத்தம்மாள் சத்திரம் என்ற நினைவு சின்னத்தை கட்டினார். இந்த முத்தம்மாள் சத்திரம் தமிழக தொல்லியல் துறை சார்பில் தஞ்சை மாவட்டத்தில் 6ஆவது நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சத்திரம் தற்போது ரூ.13 கோடி செலவில் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூரில் இயங்கி வரும் பிரபல தனியார் நிறுவனம் மக்கள் தொடர்பு அலுவலர் (PRO) பணிக்கு வரும் சனிக்கிழமை பிப்ரவரி 22 அன்று காலை 10 மணி அளவில் தஞ்சாவூர் ரயிலடி எதிர்புறம் உள்ள ஹோட்டல் ஆரிய பவன் இரண்டாம் தளத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும் இந்த பணி 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.