India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவிடைமருதூர் , தேப்பெருமாநல்லூர் ஸ்ரீ விஸ்வநாதர் சுவாமி கோயில். மறுபிறவி இல்லாதவர்களே இக்கோயிலில் தரிசனம் செய்ய முடியும் என்பது ஐதீகம். ஆண்டிற்கு இரு முறை சிவராத்திரி மற்றும் மாசி மகத்தில் மட்டும் திறக்கப்படும் சூரிய மண்டல வாசல் வழியாக விஸ்வநாதரை தரிசிக்கும் பக்தர்களுக்கு 21 தலைமுறை சாபம் நீங்கும், சிவராத்திரியான இன்று மாலை 4 மணி முதல் காலை 6 மணி வரை சூரிய மண்டலவாசல் திறந்திருக்கும்.
தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் கும்பகோணம் சூா்யா நிதி நிறுவனம் மற்றும் சூா்யா சிட்ஸ் நிறுவனத்தின் மீது பதியப்பட்ட நிதி மோசடி வழக்கு தஞ்சாவூா் மாவட்ட குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, விசாரணையில் உள்ளது. எனவே கும்பகோணம் சூா்யா நிதி நிறுவன மோசடியால் பாதிக்கப்பட்ட நபா்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்டக் குற்றப் பிரிவில் பிப்.27ஆம் தேதி புகாா் செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வல்லம் பிரிவு சாலையில் உள்ள முதலை முத்து வாரி அருகே கார் ஒன்று நீண்ட நேரமாக நின்று உள்ளது.அப்போது கார் நிற்பதை மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தை அடுத்து, HIGHWAY PATROL போலீசார் விரைந்து வந்து காரை திறந்து பார்க்கையில் மர்மான முறையில் வாலிபர் இறந்து கிடந்தார்.இது குறித்து வல்லம்போலீசார் விரைந்து விசாரணை மேற்கொண்டதில் பட்டுக்கோட்டைசேர்ந்த அருண்குமார்என்பது தெரியவந்தது.
பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கும், செய்முறை தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு பிப்.25 முதல் பிப்.28ஆம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மாணவர்கள் அசல் செய்முறைப்பயிற்சி அத்தாட்சி சான்றிதழுடன் நாளை முதல் அறிவியல் பாட செய்முறைத் தேர்வை எழுதலாம். தேர்வர்கள் தவறாமல் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுடன் செய்முறை தேர்வை எழுத வர வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
பள்ளியக்ரஹாரத்தைச் சோ்ந்த ரமேஷ்பாபு (41) என்பவர் லாரி மூலம் செங்கல், மணல் ஏற்றி விற்பனை செய்து வருகிறாா். மெலட்டூா் காவல் நிலைய உதவி ஆய்வாளராக இருந்த சுகுமாா் லாரியை பறிமுதல் செய்து ஆவணங்களை திருத்த ரமேஷ்பாபுவிடம் ரூ. 3000 லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். இதில் சுகுமாருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 12 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்துள்ளார்.
தஞ்சை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதிக்குழுமத்திற்கு சமூகப்பணி உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 7ஆம் தேதி என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதிக்குழுமத்திற்கு சமூகப்பணி உறுப்பினர்கள் நியமிக்கப் படுவதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 7ஆம் தேதி என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். தஞ்சாவூர் மட்டும் 76 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் இங்கு <
இயற்கைக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து, மஞ்சள் பையை மட்டுமே பயன்படுத்தும் பள்ளி, கல்லூரி மற்றும் வணிக வளாகங்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு தொகை வழங்கப்படுகிறது. தகுதி உள்ளவர்கள் வரும் மே ஒன்றாம் தேதிக்குள் தகுந்த ஆவணங்களுடன் https://thanjavur.nic.in (அ) www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு மத்திய அரசின் தங்கப்பதக்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதன்படி காவல் துறை பணியில் இருந்து ஓய்வு பெற்ற இரண்டு பேரும் மற்றும் பணிகள் உள்ள ஆறு பேர் என மொத்தம் 8 பேருக்கு இந்த பதக்கங்கள் வழங்கப்பட்டன.
Sorry, no posts matched your criteria.