India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தஞ்சை மாவட்ட மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ <

தஞ்சை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல்<

தஞ்சை மாவட்டத்தில் 7 லட்சத்து 10 ஆயிரத்து 131 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று (ஜன.8) முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. இதில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு, ரொக்கம் ரூ. 3 ஆயிரம், வேட்டி, சேலை ஆகியவை பொங்கல் பரிசு தொகுப்பாக நியாயவிலை கடைகளில் வழங்கப்படும். எனவே இதனை பெற்று கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

போகி பண்டிகையின் போது பிளாஸ்டிக், ரப்பர், டயர் போன்ற பழைய பொருட்களை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்கள் பாதிப்பு ஏற்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். எனவே, காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து ஒத்துழைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தஞ்சை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.15-க்கு பிறகு <

தஞ்சாவூரில் அமைந்துள்ள சரபோஜி கல்லூரியில் வருகின்ற சனிக்கிழமை (ஜனவரி 10) வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 8 மணியளவில் மன்னர் சரபோஜி கல்லூரியில் தனியார் துறையை சார்ந்த பல நிறுவனங்கள் வருகை புரிந்து நேர்காணல் மூலமாக நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். வேலை தேடும் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அவர்கள் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

திருமண்டக்குடியைச் சேர்ந்த கூரியர் ஊழியரான புகழேந்தி, மருதாநல்லூரைச் சேர்ந்த சிபிசக்கரவர்த்தி நண்பர்களுடம் சேர்ந்து புகழேந்தியை தாக்கியதில் உயிரிழந்தார். புகாரின்பேரில் 5 பேர் மீது வழக்கு பதிந்து போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், சிபிசக்கரவர்த்தி, குபேரன், விக்னேஷ் ஆகிய மூவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே சித்திரக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஜாய்சன் (26) என்பவர் நேற்று (ஜனவரி 07) தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது தவறி விழுந்து ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தஞ்சாவூர் இருப்புப்பாதை காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில், இன்று (ஜன.7) இரவு 10 முதல், காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
Sorry, no posts matched your criteria.