India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று ஜன.10-ம் தேதி கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஷேர் பண்ணுங்க!

தஞ்சை மாவட்ட மக்கள் வெளிநாட்டில் வேலைவாய்ப்புகளைப் பெற அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடும் போலி ஏஜெண்ட்களால் ஏமாறாமல் இருக்க, அரசு அங்கீகரித்த ஏஜெண்ட்களை தொடர்பு கொண்டு, பாதுகாப்பான முறையில் வெளிநாடு வேலைவாய்ப்புகளைப் பெறவும். உங்கள் பகுதி ஏஜென்ட்கள் விவரங்களை பெற <

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள துணிக்கடையில் எதிர்பாராத விதமாக இன்று (ஜன.10) காலை தீ விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக கடையில் யாரும் இல்லாததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து, தஞ்சை மாநகர திமுக செயலாளர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் நேரில் சென்று ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடத்தில் கேட்டுக் கொண்டனர்.

தஞ்சை மாவட்ட மக்களே, பொங்கல் பண்டிக்கைக்கு வெளி ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு அரசுப் பேருந்துகள் மூலம் செல்ல உள்ளீர்களா? இந்த எண்களை நோட் பண்ணி வச்சிக்கோங்க!
1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500
4. இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க!

ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந்தேதி திருநங்கையர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கைகளை கௌரவிக்கும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலும் திருநங்கையருக்கான முன்மாதிரி விருது, ரூ.1 லட்சம் காசோலை, சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டுமென தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

திருவலஞ்சுழி பைபாஸ் அருகே கடந்த 2024ம் ஆண்டு இருசக்கர வாகனம் பழுதடைந்து நின்ற நபரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்று கும்பகோணம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, குற்றவாளிகளான நந்தகுமார், சிவகுமார், சரண் ஆகிய மூவருக்கும் 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

தஞ்சாவூரில் அமைந்துள்ள மன்னர் சரபோஜி அரசு கலை கல்லூரியில் இன்று (ஜனவரி 10) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 8 மணியளவில் தனியார் துறையை சார்ந்த பல நிறுவனங்கள் வருகை புரிந்து நேர்காணல் மூலமாக நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். வேலை தேடும் அனைவரும் இந்த முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். இத்தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.09) இரவு 10 முதல் இன்று (ஜன.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

Sorry, no posts matched your criteria.