Thanjavur

News April 15, 2024

மீன்பிடி தடைக்காலம் துவக்கம் 

image

மீன்கள் இனப்பெருக்கத்துக்கா ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14- ந்தேதி நள்ளிரவு வரை 61 நாட்கள் மீன்பிடிக்க தடைகாலம் நடைமுறைபடுத்தி வரப்படுகிறது. அதன்படி தடைக்காலம் தொடங்கியுள்ளதால், தஞ்சை மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள 146 விசைப்படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

News April 15, 2024

விவசாயம் செழிக்க வழிபாடு 

image

சித்திரை முதல் நாளையொட்டி, தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே நடுக்காவேரி கிராமத்திலுள்ள வயல்களில் நல்லோ் பூட்டும் விழா நேற்று நடைபெற்றது. இதில் விவசாயிகள் தங்கள் வீடுகளில் விதை நெல், வெற்றிலை, பாக்கு, பழங்கள் வைத்து பூஜைகள் செய்து, பின்னா் தங்களது உழவு மாடுகளுடன் வயல்களுக்கு சென்று நல்லோ் பூட்டி உழவு பணியைத் தொடங்கினா்.

News April 14, 2024

தஞ்சாவூர்: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

தஞ்சை கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தஞ்சை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுபான கூடங்கள், வருகிற 17-ந் தேதி காலை 10 மணி முதல் 19-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரையும், ஜூன் 4-ந் தேதியும்,  21-ந் தேதி மே தினமான 1-ந் தேதி ஆகிய நாட்களில் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

News April 14, 2024

சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

image

பேராவூரணி நகரில் அமைந்துள்ள தீராத வினை தீர்க்கும் ஏந்தல் ஸ்ரீ நீலகண்ட பிள்ளையார் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று கோவிலில் உள்ள கொடி மரத்தில் காப்பு கட்டப்பட்டது. 12 நாள் திருவிழாவான இன்று முதல் நாள் திருவிழா மிகச் சிறப்பாக கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. சாமி ஊர்வலம் நடைபெற்றது. 

News April 14, 2024

தஞ்சையில் தயாராகும் வாக்கு எண்ணும் மையம்

image

தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. இதனையடுத்த தஞ்சை குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வாக்கு என்னும் மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

News April 14, 2024

தேர்தல் பறக்கும் படையினர் ரூ.80,000 பறிமுதல்

image

நடுக்காவேரி யூனியன் வங்கி அருகில் பறக்கும் படை அதிகாரி பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கண்டியூர் நோக்கி வந்த டாட்டா லாரி வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது வாகனத்தை ஓட்டி வந்த நாமக்கல் பரமத்திவேலூர் தாலுகா புதுப்பாளையம், வள்ளியம்பட்டி தனராசு ஆவணங்களுமின்றி ரூ.80,000 எடுத்து வந்தார். அதை பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

News April 14, 2024

ராமசாமி கோவிலில் தங்க கருட வாகனத்தில் சாமி வீதி உலா

image

கும்பகோணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ராமசாமி  இக்கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான நேற்று முன்தினம் தங்க கருட வாகன வீதியுலா மற்றும் ஓலைசப்பரம் நடந்தது. நேற்று மேட்டு தெரு, வியாசராயர் தெரு, பத்மநாபன் தெரு, பாட்ராச்சார் தெரு ஆகிய பகுதிகளுக்கு பல்லக்கு வீதி யுலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

News April 13, 2024

தஞ்சாவூர் மழைப்பொழிவு விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்திற்கான நேற்றைய (ஏப்.12) மழைப்பொழிவு விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. ஈச்சன்விடுதியில் 5 செ.மீட்டரும், வெட்டிகாடில் 3 செ.மீட்டரும், குறுங்குளத்தில் 2 செ.மீட்டரும், மற்றும் அய்யம்பேட்டை, அதிராமப்பட்டினம் ஆகிய பகுதிகளில் 1 செ. மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

News April 13, 2024

தஞ்சையில் மழைக்கு வாய்ப்பு

image

தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரைக்கும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் வாட்டி வந்த வெயிலால், தற்போது பெய்யும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 13, 2024

லாரி மோதி குழந்தை உயிரிழப்பு

image

தஞ்சை, கபிஸ்தலம் அருகே பூதங்குடியில் ஐயப்பன்- காசியம்மாள் தம்பதியினர் வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இவர்களது ஒன்றரை வயது குழந்தை ராஜஸ்ரீ வீட்டின் முன் விளையாடிக் கொண்டு இருந்தது. அப்போது அப்பகுதியில் வேகமாக வந்த லாரி குழந்தை மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ராஜஸ்ரீ மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். போலீசார், லாரி ஓட்டுநர் பிரசாத் என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!