Thanjavur

News January 18, 2026

தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.17) இரவு 10 முதல் இன்று (ஜன. 18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News January 17, 2026

தஞ்சாவூர்: நினைத்த காரியம் கைகூட இந்த கோயில் போங்க!

image

கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் கபர்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள வெள்ளை விநாயகரை, தேவர்கள், பாற்கடலில் ஏற்பட்ட நுரையால் செய்து அதனை வழிபட்டு அமிர்தம் பெற்றனர்.என்பது ஐதீகம். எனவே பக்தர்கள் இந்த விநாயகரை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பதும், எடுத்த காரியம் நிச்சயமாக வெற்றயடையும் என்பதும் இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.!

News January 17, 2026

திருக்காட்டுப்பள்ளியில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா!

image

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாளை ஒட்டி, இன்று (ஜன.17) தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். அவ்வகையில், திருக்காட்டுப்பள்ளியில் அவரது திருவுருவப்படத்திற்கு, தஞ்சை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் M. ரெத்தினசாமி Ex.MLA மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்துப் அப்பகுதி மக்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்நிகழ்வில், அதிமுகவினர் பங்கேற்றனர்.

News January 17, 2026

தஞ்சாவூர்: ரேஷன் கார்டில் எளிதாக மாற்றலாம்!

image

தஞ்சாவூர் மக்களே ரேஷன் கார்டில் புது மொபைல் எண் மாற்றவும் அல்லது வேறு எண் சேர்க்கவும் இனி அரசு அலுவலங்களுக்கு அலைய வேண்டியதில்லை. சுலபமாக நீங்களே பண்ணலாம். அதற்கு
1. <>இங்கு க்ளிக்<<>> செய்யுங்க
2. மின்னணு அட்டை சேவை → மொபைல் எண் அப்டேட்
3. ரேஷன் கார்டு எண் பதிவு பண்ணுங்க
4. புதிய மொபைல் எண் பதிவிடுங்க
5. அவ்வளவுதான் உங்க புது மொபைல் எண் மாறிடும்
6. மேலும் தகவல்களுக்கு: 1800-425-5901
இதை SHARE பண்ணுங்க.

News January 17, 2026

தஞ்சாவூர்: இலவச மின்சாரம் – இத பண்ணுங்க!

image

தஞ்சாவூர் மக்களே.. தமிழ்நாடு அரசு சார்பில் இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. அவ்வகையில் இத்திட்டத்தில் மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதுவரை இணைக்காதவர்கள் இங்கு க்ளிக் செய்து சர்வீஸ் எண், மொபைல் எண் மற்றும் ஆதார் எண் பதிவிட்டு இணையலாம். இதனை அனைவருக்கும் SHARE பண்ணி உதவுங்கள்!

News January 17, 2026

தஞ்சை: டிகிரி போதும்., விவசாய வங்கியில் வேலை ரெடி!

image

தஞ்சை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 Development Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கு க்ளிக் <<>>செய்து பிப். 3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ,32,000 வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE IT.

News January 17, 2026

தஞ்சை: கள்ளச்சந்தையில் மது விற்றவர் கைது

image

தமிழகத்தில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நேற்று (ஜன.16) மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதனை பயன்படுத்தி கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்பவரை நேற்று போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 481 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

News January 17, 2026

தஞ்சை: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்!

image

தற்போதைய நவீன காலகட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் <>tnesevai.tn.gov.in<<>> என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் மாதம் ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 17, 2026

தஞ்சை: 44 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

image

தஞ்சை மாவட்டத்தில் நிர்வாக காரணங்களுக்காக 44 காவல் நிலைய ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து தஞ்சாவூர் சரக காவல்துறை துணை தலைவர் ஜியாவுல் ஹக் உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனால் மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களின் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த திடீர் பணியிட மாற்ற காவல்துறை வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

News January 17, 2026

தஞ்சை: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு தஞ்சை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

error: Content is protected !!