Thanjavur

News January 20, 2026

தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.19) இரவு 10 முதல் இன்று (ஜன. 20) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News January 20, 2026

தஞ்சை: 314 மனுக்களை வழங்கிய பொதுமக்கள்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்டா, கல்வி கடன், முதியோர் உதவி தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அடங்கிய 314 மனுக்கல் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News January 19, 2026

தஞ்சை: பதவி உயர்வு கிடைக்க இத பண்ணுங்க!

image

திருவாய்ப்பாடி பகுதியில் பாலுகந்தநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. உத்தியோகத்தில் பதவி உயர்வு வேண்டி நீண்ட நாட்களாகக் காத்திருப்பவர்கள் இக்கோயிலில் அமைந்துள்ள மூலவரான பாலுகந்தநாதருக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் அணிவித்து மனமுருகி வழிபட்டால் தடைகள் நீங்கி கைமேல் பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பதவி உயர்வுக்காக காத்திருக்கும் உங்கள் நண்பர்களும் பயன்பெற இத்தகவலை SHARE பண்ணுங்க!

News January 19, 2026

தஞ்சை: இனி வாட்ஸ்ஆப் மூலம் சான்றிதழ்கள்!

image

தஞ்சை மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள், மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இத்தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க!

News January 19, 2026

தஞ்சாவூர்: அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு

image

தஞ்சாவூர் மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன்<> இந்த லிங்கை கிளிக் செய்து<<>> பதிவிட்டால் போதும். பேரிடர் மேலாண்மை துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.!

News January 19, 2026

தஞ்சாவூர்: கம்பெனி CALL-களை தடுக்க சூப்பர் வழி!

image

தஞ்சாவூர் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க.!

News January 19, 2026

தஞ்சாவூர்: அமைச்சர் , எம்எல்ஏ விடுதலை – அதிரடி தீர்ப்பு

image

கடந்த 2017-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன், மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், கும்பகோணம் துணை மேயர் தமிழழகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அவர்களை வழக்கில் இருந்து விடுவித்து தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News January 19, 2026

தஞ்சாவூர்: போலீசார் அதிரடி – ஒருவர் கைது

image

தஞ்சாவூர், சாலியமங்கலம் பகுதியில் சட்டவிரோத மது விற்பனை செய்வதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு சோதனை மேற்கொண்டதில், சாலியமங்கலம் மேற்குதெருவை சேர்ந்த சிலம்பரசன்(37) என்பவர், மது விற்பனை செய்வதாக தெரிய வந்தது. இதையெடுத்து அவரிடம் விசாராணை மேற்கொண்டு, 481 மதுபாட்டிகள் பறிமுதல் செய்து, கைது செய்தனர். மேலும் மாவட்டம் முழுவதும் நடந்த சோதனையில் 1622 பாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

News January 19, 2026

தஞ்சாவூர்: இனி Gpay, Phonepe தேவையில்லை!

image

தஞ்சாவூர் மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க.

News January 19, 2026

தஞ்சாவூர்: இளைஞர் அதிர்ச்சியில் மரணம்

image

தஞ்சாவூர் மாவட்டம் ஏனாதிக்கரம்பை கீராமத்தை சேர்ந்தவர் சரவணன்(32). இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பருக்கு மரத்தை வெட்ட உதவியபோது, அவரது காலில் மரம் விழுந்துள்ளது. இதில், காலில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தபோது, அவரை பரிசோத்த்த மருத்துவர்கள், காயமடைந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு சரவணன் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

error: Content is protected !!