India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, கோவை, நீலகிரி, திருச்சி, சேலம் உள்ளிட்ட 32 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (அக்.5) இரவு 8 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: ஒன்றிய ரயில்வே அமைச்சகத்திடம் முன்வைத்த கோரிக்கையின் படி திருச்சியில் இருந்து தஞ்சாவூர் வழியாக சென்னைக்கு பகல் நேரத்தில் கூடுதலாக ஒரு ரயில் வரும் அக்டோபர் 11-ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது எனத் தெரிவித்துள்ளார். இதனால் தஞ்சை மற்றும் சுற்று வட்டார ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தஞ்சை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து மாபெரும் கல்விக்கடன் முகாமை இன்று நடத்தியது. நிகழ்வில் தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர்
முரசொலி கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தனர்.
உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம், DRO, RDO, மேயர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர், அனைத்து வங்கி அதிகாரிகள் பயன்பெறும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கப்பட்டுள்ள குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. போட்டியாளர்கள் பயன் பெறும் வகையில் தஞ்சை வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையத்தில் வருகிற 7ஆம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது. போட்டியாளர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தஞ்சாவூர் மாவட்ட ஊர் காவல் படையில் உள்ள 52 (49 ஆண்கள் – 03 பெண்கள்) காலி பணியிடங்களுக்கான தேர்வு தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் விண்ணப்பிக்கலாம். தகுதி உடையவர்கள் வருகிற 10.10.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது.
திருவிடைமருதூர் தாலுகா திருமங்கலக்குடி கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் வரும் 9ஆம் தேதி நடக்கிறது. இந்த முகாமில் மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து தீர்வு காணலாம். மேலும் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெறுவதற்கு முன்னரே முன் மனுக்கள் பெறும் பொருட்டு பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை திருமங்கலக்குடி கிராம நிர்வாக அலுவலரிடம் அளிக்கலாம்.
தஞ்சை மாவட்டத்தில் திருப்பனந்தாள், திருக்காட்டுப்பள்ளி, திருப்புறம்பி, பேராவூரணி உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் நாளை (அக்.5) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருப்பனந்தாள், சோழபுரம், பாலாக்குடி, அணைக்கரை, தத்துவாஞ்சேரி, சிக்கல்நாயகன்பேட்டை, மானம்பாடி, கோவிலாச்சேரி உள்ளிட்ட பிற பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி தினத்தில் விடுமுறை அளிக்காத 102 நிறுவனங்கள் மீது தொழிலாளர் ஆணயரகம் அபராதம் விதித்தது . தஞ்சாவூர் மாவட்டத்தில் 164 கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் ஆகியவற்றில் தொழிலாளர் துறையினர் புதன்கிழமை ஆய்வு செய்தனர். இதில், 102 நிறுவனங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.
கும்பகோணம் தாலுகா சென்னை சாலை செட்டி மண்டபத்தில் தாஜ்மஹால் பொருட்காட்சி மிக பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டு பொதுமக்கள் ஏராளமானமானோர் கண்டுகளிக்க ஏதுவாக செப்.19 முதல் மாலை 4 மணி – இரவு 10 மணி வரை நடைபெற்று வருகிறது. கும்பகோணம் தாலுகா காவல் நிலையம் அனுமதியுடன் பொதுமக்கள் பார்வைக்காக தாஜ்மஹாலை சிறந்த முறையில் வடிவமைத்துள்ளனர்.
கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தஞ்சை மாவட்டத்தில் ஆறுகள், வாய்க்கால்கள், குளங்களில் முழு கொள்ளளவு நீர் நிரம்பி செல்வதால் நீரின் வேகம் அதிகமாக உள்ளது. தூர்வாரப்பட்டு ஆழமாக உள்ளதால் குளிக்கவும் மற்றும் பிற காரணங்களுக்காக ஆறுகள், வாய்க்கால்கள், குளங்களுக்கு செல்பவர்கள் கவனமாகவும், முன் எச்சரிக்கையுடனும் குளிக்க வேண்டும்.
Sorry, no posts matched your criteria.