India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தஞ்சையை ஆண்ட சோழப் பேரரசர் 8 திசைகளிலும் அஷ்ட சக்திகளை காவல் தெய்வமாக உருவாக்கினார். அதில், ஒருவர் தான் இந்த புன்னைநல்லூர் மாரியம்மன். இங்குள்ள அம்மன் புற்று மண்ணால் ஆனது. ஆகவே இந்த அம்மனுக்கு அபிஷேகம் செய்வதில்லை, அதுவே இக்கோயிலின் சிறப்பாகும். அதற்குமாறாக 5 ஆண்டுக்கு ஒருமுறை தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறும். இங்கு வழிபட்டால் அம்மை நோய் மற்றும் தீரா நோயும் தீரும் என கூறப்படுகிறது. இதை SHARE செய்ங்க

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 312
3. வயது: 18 – 40
4. சம்பளம்: ரூ.44,900
5. தகுதி: 12-ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 29.01.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

தஞ்சாவூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற ஜன.28ம் தேதி காலை 10 மணிக்கு தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. அதே தினம் பிற்பகல் 3 மணியளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டமும் நடைபெறவுள்ளது. இதில், விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் நித்யா தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு தஞ்சை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்!

தஞ்சை மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலவர் மு.க.ஸ்டாலின் வருகை தரவுள்ளார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி வருகிற 28ம் தேதி காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலவர் மு.க.ஸ்டாலின் வருகை தரவுள்ளார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி வருகிற 28ம் தேதி காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவிடைமருதூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஊழியர் சுப்பிரமணியன் ஆன்லைன் டிரேடிங்கில் சிறிய தொகைக்கு லாபம் கிடைத்ததை நம்பி, 11 தவணைகளாக மொத்தம் ரூ.47.30 லட்சத்தை அனுப்பியுள்ளார். செயலி ரூ.77 லட்சம் லாபம் காட்டிய நிலையில், பணத்தை எடுக்க முயன்றபோது மர்ம நபர்கள் தொடர்பை துண்டித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்ணை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

நேரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் அல்லாத நபர்கள் போலி ஆவணங்கள் தயார் செய்து நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளும் வியாபாரிகள், நெல் கொள்முதல் பணியாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். முறைகேட்டில் ஈடுபட்டால் கட்டணமில்லா எண்ணிற்கு 8005993540 புகார் அளிக்கலாமெனவும் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.